அம்மாவை பார்த்து பாசத்தை பொழியும் கண்ணன்... வைரலாகும் ஃபோட்டோக்கள்

சென்னை : விஜய் டிவி.,யில் சென்டிமென்ட், அழுகை என சென்றாலும் ஒரு எபிசோட்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்பம், அண்ணன்- தம்பி பாசம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

Pandian stores Kannan meets lakshmi amma photos goes viral

சென்டிமென்ட், யதார்த்தமான நிகழ்வுகளை கொண்டதால் இந்த சீரிலுக்கு ரசிகர்கள் அதிகம். கேரக்டர்கள் பெயரால் ரசிகர்களின் மனதில் பதிந்த இந்த சீரியல் நடிகர், நடிகைகளுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. சோஷியல் மீடியாக்களிலும் இவர்கள் மிகவும் பிரபலம். சீரியல் கதையை நிஜத்தில் நடப்பதை போல் நினைத்து கருத்து சொல்பவர்களே அதிகம்.

விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த சீரியலில் திடீர் திருப்பமாக, மூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் ஆகியோரின் அம்மாவான லட்சுமி அம்மா உயிரிழப்பதாக காட்டப்பட்டது. வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட கடைசி மகன் கண்ணன் வெளியூர் சென்ற நேரத்தில் அம்மா, உயிரிழப்பதாகவும் கடைசியாக அம்மாவின் முகத்தை பார்க்க கண்ணன் வருவாரா என்ற சஸ்பென்சுடன் கதை சென்றது.

இதற்கிடையில் நிஜத்தில் நடப்பதை போல் அத்தனை இறுதி சடங்குகளும் ஒன்று விடாமல் நடைபெறுவது பலரையும் சீரியலுடன் ஒன்று போக வைத்து விட்டது. கண்ணன் வருவதற்கு முன்பாக அம்மாவின் உடலை எடுத்துச் சென்று, இறுதிச் சடங்குகளை முடிக்கிறார்கள். இதனால் அம்மாவின் முகத்தை கடைசியாக பார்க்க முடியவில்லையே என நினைத்து கதறி எழுகிறான் கண்ணன்.

கண்ணனின் நடிப்பை பலரும் பாராட்டினர். இதற்கு முன்பும் தனக்கு விபத்து ஏற்பட்ட காயத்தையும் மறைத்து, மிகச் சிறப்பாக கண்ணன் நடித்ததை அவரின் சகோதரி உள்ளிட்டோர் சோஷியல் மீடியாவில் பாராட்டி இருந்தனர். இந்நிலையில் தற்போது அம்மா இறந்த சீனுக்காக நிஜமாகவே மொட்டை அடித்துள்ளார் கண்ணன். இதனை பலரும் வியந்து பாராட்டி உள்ளனர். அழுத்தமான சென்டிமென்ட் சீனுடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது.

சோஷியல் மீடியாவில் சிலர், சீரியல் கதையை நிஜமென நினைத்து, கண்ணனை திட்டி தீர்த்து வருகின்றனர். செய்கிற தப்பெல்லாம் செய்து விட்டு, பாவம் போல் முகத்தை வைத்து கொள்கிறான் என கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் கண்ணன் பாவம் என கண்ணனுக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் லட்சுமி அம்மா கேரக்டரில் நடித்த நடிகை ஷீலா, பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டிற்கு மீண்டும் வந்து கண்ணனை சந்தித்துள்ளார். தத்ரூபமான அவரின் நடிப்பை நேரில் சென்று பாராட்டி உள்ளார். சீரியலில் அம்மா - மகனாக நடித்த இவர்கள், நிஜத்தில் மீண்டும் சந்தித்த ஃபோட்டோக்கள் மெச வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X