தாயின் முகத்தை பார்க்க முடியாமல் கதறும் கண்ணன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் லேட்டஸ்ட் ப்ரோமோ

சென்னை : விஜய் டிவி.,யில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அதிகமானவர்களால் விரும்பி பார்க்கப்படும் சீரியல்களின் பட்டியலில் டிஆர்பி.,யில் பாரதி கண்ணம்மா சீரியலுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

Pandian stores serial latest promo melts everyone

அண்ணன் தம்பி உறவை, பாச பிணைப்பை மையமாக கொண்ட கதை. மூத்த அண்ணனான சத்யமூர்த்தி. அவரது மூன்று தம்பிகள் ஜீவா, கதிர், கண்ணன். தம்பிகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக தாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என மனைவி தனத்திடம் திருமணமான புதிதில் கூறுகிறார் மூர்த்தி. தனமும், தம்பிகளை தனது சொந்த பிள்ளைகளை போல் வளர்க்கிறார்.

Pandian stores serial latest promo melts everyone

தம்பிகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகி, அவர்களுக்கும் திருமணம் ஆகிறது. இந்த கூட்டு குடும்பத்தில் திருமணமாகி 15 ஆணடுகளுக்கு பிறகு கர்ப்பமாகிறார் தனம். வீடே சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருக்கையில், உறவுக்கார பெண்ணான ஐஸ்வர்யாவை காதலிக்கும் கண்ணன், சூழ்நிலை காரணமாக வீ்டடிற்கு தெரியாமல் அவளை திருமணம் செய்து கொள்கிறான். இதனால் மூர்த்தி, கண்ணனை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்.

மூர்த்திக்கு தெரியாமல் ஜீவா, கதிர், மீனா, முல்லை ஆகியோர் தங்கள் பங்கிற்கு கண்ணனுக்கு அவனுக்கே தெரியாமல் உதவுகிறார்கள். மீண்டும் கண்ணனை வீட்டிற்குள் சேர்த்துக் கொள்வார்களா என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், எதிர்பாராத விதமாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் மூர்த்தியின் அம்மா லட்சுமி உயிரிழக்கிறார். அதே சமயம் வேலை விஷயமாக கண்ணன் வெளியூர் செல்கிறான். அவன் எப்போது திரும்பி வருவான் என குடும்பமே காத்திருப்பதாக கடந்த வார எபிசோட் நிறைவடைகிறது.

Pandian stores serial latest promo melts everyone

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் வரும் வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், ஊருக்கு திரும்பும் கண்ணனிடம், அம்மா இறந்த தகவலை சொல்கிறாள் ஐஸ்வர்யா. அம்மா இறந்த தகவலை போஸ்டரில் பார்த்து விட்டு, பதறிப் போய் ஓடி வருகிறான் கண்ணன். அதற்குள் ஊர்காரர்களின் நெருக்கடி காரணமாக லட்சுமியின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று, அங்கும் கண்ணன் வருவதற்காக காத்திருக்கிறார்கள் மூர்த்தியும், அவரது தம்பிகளும்.

ஆனால் தொடர்ந்து கண்ணன் வர தாமதமாவதால் ஊர் பெரியவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அம்மாவின் உடலுக்கு கொள்ளி வைக்கிறார் மூர்த்தி. தீ வைத்து முடித்ததும், இடுகாட்டிற்கு வருகிறார் கண்ணன். அம்மாவின் முகத்தை கடைசியாக கூட பார்க்க முடியாததை நினைத்து, தரையில் விழுந்து கதறி அழுகிறான் கண்ணன். அனைவரும் சமாதானம் செய்ய முயற்சித்தும், கண்ணன் அம்மாவை நினைத்து கதறி அழுகிறான். இவ்வாறு அந்த ப்ரோமோ முடிகிறது.

அம்மா இறந்த சோகத்தில், அவரது முகத்தை கடைசியாக கூட பார்க்க முடியாததை நினைத்து உச்சகட்ட துக்கத்தில் இருக்கும் கண்ணனை, மூர்த்தி வீட்டிற்குள் சேர்த்துக் கொள்வாரா, கதையில் அடுத்து என்ன நடக்கும், கடந்த இரண்டு வாரங்களாக கண்ணீர், சென்டிமென்ட் காட்சிகள் மட்டுமே நிறைந்திருப்பதால், மீண்டும் சீரியலின் விறுவிறுப்பை கூட்டி, டிஆர்பி.,யை உயர்த்த புதிதாக ட்விஸ்ட் ஏதாவது வைப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X