»   »  பட்டுச்சேலை .... புதுயுகம் டிவியில் புத்தம் புது சீரியல்

பட்டுச்சேலை .... புதுயுகம் டிவியில் புத்தம் புது சீரியல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுயுகம் டிவி சேனலில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் பட்டுச்சேலை. இதில் ஹீரோயின்களின் அழகு அம்மாவாக நடித்த மீனாகுமாரி வில்லியாக நடிக்கிறார். தமிழ்நாட்டில் டிவி சேனல்களுக்கு பஞ்சமில்லாதது போலவே டிவிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் பஞ்சமில்லை. அடுத்தவர் குடும்பத்தை கெடுப்பதில் தொடங்கி, மாமியாருக்கு விஷம் வைப்பதும், மருமகளை பைத்தியம் பிடிக்க வைப்பதுமாய் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை யாராவது ஒருவர் அழுதுகொண்டே இருக்கின்றனர்.

புதுயுகம் தொலைக்காட்சியில் ஆன்மிகம், மாயஜாலம், திகில், நகைச்சுவை, காதல் மற்றும் கொரியன் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த வரிசையில் வரும் 08-02-2016 முதல் புதிய வரவாக விறுவிறுப்பான குடும்பத் தொடர் 'பட்டுச்சேலை' ஒளிபரப்பாக இருக்கிறது.

வில்லி காஞ்சனாவிற்கும், நாயகி தாமரைக்கும் இடையேயான கதைதான் பட்டுச்சேலை. கலர்புல் சீரியலில் கலகத்திற்கும் பஞ்சமிருக்காது என்றே கூறுகின்றனர்.

பட்டுசேலை

பட்டுசேலை

நகரில் பிரமாண்டமான புடவைக் கடை நடத்திவரும் காஞ்சனா, தனக்குப் போட்டியாக தொழில் செய்ய நினைப்பவர்களை அடியோடு அழித்துவிடும் ஆணவமும் பணத்திமிரும் கொண்டவள். அப்படிப்பட்ட காஞ்சனாவிடம் இருந்து பட்டுச்சேலை கடனுக்கு வாங்கிவந்து, தன்னுடைய சிறிய கிராமத்தில் தவணைக்கு விற்பனை செய்கிறாள் அழகும் இளமையும் நேர்மையும் கொண்ட நாயகி தாமரை.

சமூக சேவகி தாமரை

சமூக சேவகி தாமரை

புடவை வியாபாரம் செய்வதுடன், ஊருக்கு நல்லது செய்யும் சமூகசேவகியாகவும், அநியாயங்களை எதிர்க்கும் புரட்சிப்பெண்ணாகவும் இருக்கிறாள் தாமரை. அதனால் ஊர்த் தலைவர் முதல் அதிகாரிகள் வரை தாமரையைக் கண்டால் ஓடி ஒளிகிறார்கள்.

தாமரையின் காதல்

தாமரையின் காதல்

அடாவடி காஞ்சனாவின் மகன் அஜய்க்கும் அழகிய பெண் தாமரைக்கும் காதல் மலர்கிறது.தன்னுடைய போட்டியாளர்களையே அழித்துவிடும் குணம் கொண்ட காஞ்சனா, ஏழைப்பெண் தாமரையை மருமகளாக ஏற்றுக்கொள்வாளா?

வில்லி மீனாகுமாரி

வில்லி மீனாகுமாரி

தன்னுடைய அம்மாவின் எதிர்ப்பை மீறி தாமரையை மணம் முடிக்க முன்வருவானா அஜய் என்பதில் தொடங்கி எதிர்பாராத திருப்பங்களுடன் பயணிக்கிறது, 'பட்டுச்சேலை' தொடர். தாமரையாக ஷாதிகா, காஞ்சனாவாக பிரபல நடிகை மீனாகுமாரி, அஜய்யாக ரிச்சர்ட் நடிக்க, இவர்களுடன் மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாத, ‘பட்டுச்சேலை' குடும்பத்தொடர் புதுயுகம் தொலைக்காட்சியில் பிப்ரவரி 8ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அடுத்த நாள் மதியம் 1:00 மணிக்கு மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது.

English summary
A new tv serial Pattuselai will telecast on Puthuyugam television on february 8.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil