பாவனி ரெட்டியோட ட்ரீம் ஹவுஸ் ரெடியாகிட்டு இருக்கு.. விஜே பிரியங்கா மனமார வாழ்த்து!

சென்னை: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ஏகப்பட்ட ஜோடிக்கள் காதல் கன்டென்ட் என்கிற பெயரில் காமெடி பண்ணிட்டு போன நிலையில், உண்மையாகவே பிக் பாஸ் வீட்டுக்குள் தன்னை கரெக்ட் செய்த அமீரை வெளியே சென்றும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் பாவனி ரெட்டி.

முதல் கணவர் தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்த நிலையில், மிகவும் மன வருத்தத்தில் இருந்த பாவனி ரெட்டியை பிக் பாஸ் வீட்டில் துரத்தி துரத்திக் காதலித்தார் அமீர்.

Pavani Reddy shares his Dream House completion photo in her instagram Vj Priyanka send wishes
Photo Credit:

இருவரும் சினிமாவில் சாதிக்க போராடி வரும் நிலையில், கிடைத்த வருமானத்தை சேர்த்து வைத்து தங்களுக்கான ஒரு புது வீட்டை கட்டியுள்ளனர். அதன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாவனி ரெட்டி வெளியிட நெருங்கிய தோழியான விஜே பிரியங்கா வாழ்த்தியுள்ளார்.

Pavani Reddy shares his Dream House completion photo in her instagram Vj Priyanka send wishes
Photo Credit:

புது வீடு கட்டி வரும் பாவனி: பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளர்களாக அமீர் மற்றும் பாவனி பங்கேற்ற நிலையில், அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இருவரும் அஜித் குமாரின் துணிவு படத்தில் நடித்தனர். அதன் பின்னர், பாவனி விமல் நடித்த ஓம் காளி ஜெய் காளி வெப்சீரிஸிலும் நடித்தார். அமீர் ஒரு படத்தை இயக்கி நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இருவரும் சேர்ந்து வாழ கட்டி வரும் புதிய வீட்டின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் நடிகை பாவனி ரெட்டி.

பிரியங்கா முதல் ஷிவின் வரை: விஜே பிரியங்கா பிக் பாஸ் வீட்டில் இருந்தே அமீர் - பாவனி காதலுக்கு தூதுவராக இருந்தார். மேலும், இருவரது திருமணத்திலும் கலந்துக் கொண்டார். பிரியங்காவின் திருமணத்திலும் அமீர் - பாவனி கலந்துக் கொண்டனர். இந்நிலையில், பாவனியின் பதிவை பார்த்த பிரியங்கா முத்தம் கொடுக்கும் எமோஜிக்களையும் ஹார்ட்டின் எமோஜிக்களையும் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரியங்காவின் கணவர் வசி, பிக் பாஸ் பிரபலம் ஷிவின் மற்றும் ஏகப்பட்ட விஜய் டிவி பிரபலங்கள் பாவனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். சீக்கிரமே புதுமனை புகுவிழா நிகழ்ச்சியையும் பாவனி நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X