»   »  'கவர்ச்சிப் புயல்' மந்த்ரா பேடி மீண்டும் தொலைக்காட்சியில்..

'கவர்ச்சிப் புயல்' மந்த்ரா பேடி மீண்டும் தொலைக்காட்சியில்..

By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil

சீரியல், சினிமா, கிரிக்கெட் வர்ணனை என கலக்கிய மந்த்ரா பேடி நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தொலைக்காட்சியில் நடிக்க உள்ளார்.

'சாந்தி' தொடரில் நடித்து பிரபலமானவர் மந்த்ரா பேடி 41. இதன்பின் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கத் தொடங்கினார். சினிமாவிலும் தலை காட்டினார். தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்தில் சிறிய ரோலில் நடித்தார்.

பிறகு, கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து அளிக்கும் தொகுப்பாளினியான அவதாரம் எடுத்தார். வழக்கமான தொகுப்பாளினிகள் போல சேலை, துப்பட்டாவை இழுத்துப் போர்த்தாமல் செக்ஸி ஆடையில் வந்து இளைஞர்கள் மத்தியில் 'கலவரத்தை' ஏற்படுத்தினார். நடிகர் சிம்புவுடன் 'மன்மதன்' படத்தில் சூப்பராக ஒரு டான்ஸ் போட்டு தமிழகத்திலும் புகழ் பெற்றார்.

திடீரென டெல்லியை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் 'பேன்டீஸ்' விளம்பரத்தில் நடித்தார். சோனி டிவியில் இவரது நிகழ்ச்சி தொகுப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. பின்னர் ஏனோ ஒதுக்கப்பட்டார்.

மந்த்ரா பேடி

மந்த்ரா பேடி

41 வயதாகும் மந்த்ரா பேடி 10 வருட இடைவெளிக்கு பிறகு நடிகை மந்திரா பேடி தொலைகாட்சி தொடர்கள் மூலம் மறுபிரவேசம் செய்து உள்ளார்.

ஐடியல் ஜூனியர் மற்றும் 24 உணவு வகைகள் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார்.

வாய்ப்புகளை மறுத்தேன்

வாய்ப்புகளை மறுத்தேன்

கடந்த 10 வருடங்களாக நான் எந்த ஒரு ந்கழ்ச்சியிலும் பங்குபெறவில்லை.ஆனால் பல்வேறு வாய்ப்புகள் எனக்கு டெலிவிஷனிலும் சினிமாவிலும் வந்தது. ஆனால் நான் எதையும் ஏற்று கொள்ள வில்லை. ஆனால் நான் திரும்ப வர முடிவு செய்தேன்.

கிரிக்கெட் பிரபலம்

கிரிக்கெட் பிரபலம்

கிரிக்கெட் மூலம் எலோருக்கும் எனது முகம் பரீட்சியமானது.பின்னர் தொலைகாட்சியில் வந்தேன். என சில சினிமா வாய்ப்புகளும் வந்தது அதில் நடனம் ஆடவும் சில அண்ணி தங்கை கேரக்டர்களும்.நான் முக்கிய கதாபாத்திரங்களுக்காக காத்திருந்து எனது நேரத்தை வீணடிக்க விரும்ப வில்லை.

எனக்குத்தான் முன்னிலை

எனக்குத்தான் முன்னிலை

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அது என்னை மட்டுமே சுற்றி பின்னபட்டதாக இருக்க வேண்டும் என எண்ணினேன்.அப்படி அமைந்ததுதான் இந்த 24 நிகழ்ச்சி. தற்போதும் நான் பிசியாகத்தான் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Popular television presenter Mandira Bedi, who has hosted various cricket based shows, says people had stopped looking at her as an actor. After acting in popular shows like 'Shanti' and 'Kyunki Saas Bhi Kabhi Bahu Thi', Mandira appeared on TV shows as a host or anchor. Now, she is back on television after nine years with Indian adaptation of American drama series '24'.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more