»   »  ஆன்மீகம், ஆரோக்கிய உணவு… உற்சாகம் தரும் பெப்பர்ஸ் மார்னிங்

ஆன்மீகம், ஆரோக்கிய உணவு… உற்சாகம் தரும் பெப்பர்ஸ் மார்னிங்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தொலைக்காட்சி சேனல்களில் காலை நேரங்களில் உடற்பயிற்சி, ஆன்மீகம் என ஏதாவது ஒரு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத்தான் வருகின்றன. இதில் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது பெப்பர் டிவி வழங்கும் "பெப்பர் மார்னிங்'. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில், தினம் ஒரு தேவாரத் திருத்தலத்துடன் ஆரம்பிக்கிறது.

ஸ்மார்ட் கிட்ஸ், உணவும் குணமும், மூன் சைன்ஸ், சிறகடிக்கும் மனசு என்று பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளது. பெரியவர்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரையும் கவரும் விதமாக இக்காலை நிகழ்ச்சி அமைந்துள்ளது.

ஆலயங்களை அறிவோம்

ஆலயங்களை அறிவோம்

தமிழ்நாடு மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள சிவன் வழிப்பாட்டு தலங்கள், ஆலய வழிபாடுகள் போன்ற நிகழ்ச்சிகள் தினம் ஒரு தேவாரதிருதலம் நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது

ராசிபலன்

ராசிபலன்

தினமும் ஜோதிடம் கணிப்புகளும், ராசி பலன் நிகழ்ச்சிகளும் மூன் சைன்ஸ் நிகழ்ச்சியிலும் இடம் பெற்றுள்ளது.

ஆரோக்கிய உணவு

ஆரோக்கிய உணவு

ஆரோக்கியமான உணவுகளும், சத்தான உணவால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றிய விளக்கமும் உணவும் குணமும் நிகழ்ச்சி அளிக்க உள்ளது.மேலும் ஸ்மார்ட் கிட்ஸ் பிரிவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்படி பேணிகாப்பது என்பதை பற்றியும் விளக்கப்படுகிறது.

குடும்ப பிரச்சினைகள்

குடும்ப பிரச்சினைகள்

சிறகடிக்கும் மனசு நிகழ்ச்சி காதல் பிரச்சனை,கணவன், மனைவி இடையே பிரிவுகள் குடும்ப உறவுகளில் சிக்கல்,மாணவர்களின் கல்வி பற்றிய அச்சம் மற்றும் பாதுகாப்பு குறிப்புகள் சொல்லும் நிகழ்ச்சியாக இருக்கிறது.

English summary
Peppers Morning is broadcast on Peppers TV, every morning.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil