»   »  இப்ப இந்த பெப்பர்ஸ் டிவி பக்கம் 18ம் தேதி போனீங்கன்னு வைங்க.. அங்க பாரதிராஜா பேட்டி பார்க்கலாம்!

இப்ப இந்த பெப்பர்ஸ் டிவி பக்கம் 18ம் தேதி போனீங்கன்னு வைங்க.. அங்க பாரதிராஜா பேட்டி பார்க்கலாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் வரும் புதன்கிழமையன்று ஒளிபரப்பாக இருக்கின்றன. சிறப்பு நிகழ்ச்சிகளின் விவரம் வருமாறு,

காலை 7:00 மணிக்கு காயத்ரி வெங்கடேசன், ஜனனி, பத்மா சங்கர் ஆகியோர் பங்குபெறும் பக்தி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

காலை 7.30 மணிக்கு 'தீபாவளி திருநாள் - தீபாவளி' ஏன் உருவானது, அதற்கு என்ன காரணம் என்பது குறித்து விளக்குகிறார் காளியூர் நாராயணன்.

இசை சங்கமம்

இசை சங்கமம்

8:00 மணிக்கு இசை சங்கமம் எனும் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. காலை 9:00 மணிக்கு 'வானமே எல்லை' இந்த நிகழ்ச்சியில் திரு. நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் - வாழ்க்கையில் எப்படி முன்னுக்கு வருவது என்பது குறித்துப் பேசுகிறார்.

பாரதிராஜா நேர்காணல்

பாரதிராஜா நேர்காணல்

காலை 1௦:00 மணிக்கு, இப்போது படங்களில் நடித்தும் வரும் இயக்குனர் இமயம் பாரதிராஜாவுடன் ஒரு சிறப்பு நேர்காணல் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் நேயர்கள் நேரடியாக பாரதிராஜாவுடன் உரையாடுகிறார்கள்.

பார்வதி நாயர் இன்டர்வியூ

பார்வதி நாயர் இன்டர்வியூ

காலை 11:00 மணிக்கு நடிகை பார்வதி நாயருடன் ஒரு கலந்துரையாடல் ஒளிபரப்பாகும். 'அறம் செய்து பழகு' - ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் வாழ்க்கையின் தத்துவத்தை விளக்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். மதியம் 12:00 மணி இப்படை வெல்லும் இயக்குனர் கௌரவுடன் சிறப்பு சந்திப்பு ஒளிபரப்பாகிறது.

காமெடி நிகழ்ச்சிகள்

காமெடி நிகழ்ச்சிகள்

மாலை 4:00 மணி சரவெடி நூறு - முல்லை கோதண்டம் வழங்கும் இரண்டரை மணி நேர நான்ஸ்டாப் காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அதன் பிறகு 'சிரிக்கும் மத்தாப்பு' எனும் ‘அட்ரா சக்க' தனசேகர் வழங்கும் நான் ஸ்டாப் காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

English summary
Diwali special programs on Peppers TV are on air on Wednesday. At 10:00 AM, a special interview with Iyakkunar Imayam Bharathiraja will telecast on peppers TV.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X