»   »  பெப்பர்ஸ் டிவியின் அரங்கேற்றம்... பரத நாட்டிய ரசிகர்களுக்கு வரப்பிரசாதம்

பெப்பர்ஸ் டிவியின் அரங்கேற்றம்... பரத நாட்டிய ரசிகர்களுக்கு வரப்பிரசாதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரம்பரிய கலைகளை பயிலும் கலைஞர்களுக்கு அற்புதமான மேடைகளை நிகழ்ச்சிகள் மூலமா தொடர்ந்து பாதை அமைத்து கொடுத்து வருவது பெப்பர்ஸ் டிவி. அந்த வகையில் இளம் கலைஞர்களை அவர்களின் திறமையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் நிகழ்ச்சி அரங்கேற்றம் நிகழ்ச்சி ஞாயிறு தோறும் காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

பரத நாட்டியம் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மைவாய்ந்ததும், இந்தியாவிலும், இலங்கையிலும், மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனால் பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர்.

ஒவ்வோர் இனத்தின் பெருமைகளைப் பறை சாற்றுவது அவ்வினத்தினால் பேணி வளர்க்கப்பட்டு வரும் கலை, கலாசாரம், பண்பாடு ஆகியனவாகும்.
இந்த வகையில் தமிழினம் மிகுந்த சிறப்புகளைக் கொண்ட ஓர் இனமாக மிளிர்ந்து வருவதை உலகறியும். கலையும் பண்பாடும் ஓரினத்தின் அடையாளம் என்பதை நன்கு நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நடன நிகழ்ச்சி

நடன நிகழ்ச்சி

ஆடல், பாடல், கிராமிய நடனங்கள், திரைப்பட பாடல்களுக்கு நடனமாடும் ரியாலிட்டி ஷோக்கள் போல பரத நாட்டிய அரங்கேற்றத்திற்காக சிறப்பான நிகழ்ச்சி ஒன்றினை பெப்பர்ஸ் டிவி ஒளிபரப்புகிறது.

 பெப்பர்ஸ் டிவி

பெப்பர்ஸ் டிவி

எந்த விதமான திறமையை காட்டும் கலைஞராக இருந்தாலும் அரங்கேற்றம் என்பது ரொம்பவே முக்கியமான தருணம். அந்த தருணத்தை பெப்பர்ஸ் டிவியோடு சேர்ந்து கொண்டாடி அதை உலகம் முழுவதும் உள்ள நேயர்களும் பார்த்து மகிழ்வதுதான் அரங்கேற்றம்.

 நடன அரங்கேற்றம்

நடன அரங்கேற்றம்

இந் நிகழ்ச்சியில் நடன கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் ஆகியோர் பங்குபெறுகின்றனர். இந்த வார நிகழ்ச்சியில் சமீபத்தில் பரத நாட்டிய அரங்கேற்றம் செய்த நிருபமா மற்றும் ஸ்ரீ நிதி பங்குபெறுகிறார்கள்.

 நடனக்கலைஞர் ஸ்ரீதேவி

நடனக்கலைஞர் ஸ்ரீதேவி

அரங்கேற்றம் நிகழ்ச்சியை பிரபல பரத நாட்டிய கலைஞர் ஸ்ரீதேவி தொகுத்து வழங்குகிறார். அரங்கேற்றம் நிகழ்ச்சி ஞாயிறுதோறும் காலை 8.30 மணிக்கு பெப்பர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது.

English summary
Bharatha Nattiyam Aranketram program on Peppers TV on Sunday morning 8.30 A.M.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil