»   »  களை கட்டுது... பிக் பாஸ் வீட்டுக்குத் தலைவரான கவிஞர் சினேகன்!

களை கட்டுது... பிக் பாஸ் வீட்டுக்குத் தலைவரான கவிஞர் சினேகன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிக்பாஸ் வீட்டுக்குள் 15 பிரபலங்களின் 100 வாழ்க்கை ஆரம்பமாகிவிட்டது. முதல் நாள் நிகழ்ச்சி நேற்று முதல் ஒளிபரப்பானது.

இந்த முதல் நாளில் பிக் பாஸ் வீட்டுக்கு யார் தலைவர் என்பதைத் தீர்மானிக்க நேற்று பிக்பாஸ் கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தை ஆர்த்தி படித்தார்.

அதில் தலை இல்லாமல் வால் ஆட முடியாது. எனவே உங்கள் தலைவர் யார் என்பதைத் தீர்மானிக்குமாறு கூறப்பட்டிருந்தது.

தேர்வு

தேர்வு

இதைத் தொடர்ந்து தலைவரைத் தேர்வு செய் ஆயத்தமானார்கள். சிலர் சினேகனை முன் மொழிந்தனர். சிலர் கணேஷ் வெங்கட்ராமை முன் மொழிந்தனர்.

கணேஷ் வெங்கட்ராம்

கணேஷ் வெங்கட்ராம்

சினேகனோ காயத்ரி ரகுராமை முன்மொழிந்தார். அவருக்கு ஏக மகிழ்ச்சி. ஆனாலும் அவர் கணேஷ் வெங்கட்ராமை தலைவராக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.

நமீதா

நமீதா

வையாபுரி, கஞ்சா கருப்பு ஆகியோர் சினேகன் அல்லது நமீதா இருக்கட்டும் என்றனர். நமீதாவோ காயத்ரியை முன்மொழிந்தார்.

சினேகன்

சினேகன்

ஆர்த்தி, சக்தி வாசு ஓட்டு கணேஷ் வெங்கட்ராமுக்குத்தான். இறுதியில் சினேகனுக்கு 7 ஓட்டுகளும், கணேஷுக்கு 6 ஓட்டுகளும் கிடைத்தன. பின்னர் அனைவரும் சினேகனை தலைவராக ஒருமனதாக ஏற்றனர்.

ஃபர்ஸ்ட் அவுட் இன்று தெரியும்

ஃபர்ஸ்ட் அவுட் இன்று தெரியும்

முதல் நிகழ்ச்சி இப்படி சுவாரஸ்யம் கூட்டியது. இரண்டாம் நாள் நிகழ்ச்சி இன்று இரவு ஒளிபரப்பாகிறது. அதில் வீட்டிலிருந்து முதலில் வெளியேறப் போவது யார் என்பதை முடிவு செய்யவிருக்கிறார்கள். அப்படி வெளியேறப் போகிறவர் ஜூலியா, அனுயாவா அல்லது ஸ்ரீயா என்பது தெரிந்துவிடும்.

English summary
In the very first day of Big Boss, poet Snehan was elected as the head of Big boss family.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil