twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூப்பர் ஸ்டார் முதல் பவர் ஸ்டார் வரை… சின்னத்திரை பொங்கல் ரேஸ்!

    By Mayura Akilan
    |

    சர்க்கரைப் பொங்கலும், செங்கரும்புமாய் தித்திக்கும் பண்டிகை பொங்கல். ஜல்லிக்கட்டும்... வீரவிளையாட்டுக்களுமாய் நான்கு நாட்கள் விடுமுறை தின கொண்டாட்டம்தான்.

    பொங்கல் பண்டிகை உற்சாகம் தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சி வடிவில் வீடுகளில் இப்போது உலா வருகிறது. புத்தம் புதிய திரைப்படங்களைப் பற்றி ஏற்கனவே நாம் வாசகர்களுக்கு அறிவித்து விட்டோம். சினிமா தவிர பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் மூன்று தினங்களும் ஒளிபரப்பாக உள்ளது.

    சினிமாவும், திரை நட்சத்திரங்களின் பேட்டியுமாய் ஒளிபரப்பாகும் சின்னத்திரை பொங்கல் ரேஸில் சூப்பர் ஸ்டார் ரஜினி படம் முதல் பவர் ஸ்டார் சீனிவாசன் கலகல பேட்டி வரை ஒளிபரப்பாக உள்ளது.

    ரஜினியின் எந்திரன்

    ரஜினியின் எந்திரன்

    சன் டிவியில் ஜனவரி 15ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. அதேநாளில் கார்த்தி நடித்த அலெக்ஸ்பாண்டியன் திரைப்படமும் ஒளிபரப்பாகிறது. தைப்பொங்கல் ரிலீசாக விஜய் நடித்த தலைவா படம் உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக ஒளிபரப்பாகிறது.

    தல, தளபதி சிறப்பு நிகழ்ச்சி

    தல, தளபதி சிறப்பு நிகழ்ச்சி

    பொங்கல் ரிலீசாக திரைக்கு வந்திருக்கும் விஜய் நடித்த ஜில்லா, அஜீத் நடித்த வீரம் திரைப்படங்களின் சிறப்பு காட்சிகள் தைப்பொங்கல் தினத்தன்று சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.

    நகைச்சுவை பஞ்சாயத்து

    நகைச்சுவை பஞ்சாயத்து

    சினிமா, சின்னத்திரைக் கலைஞர்கள் பங்கேற்கும் நகைக்சுவை பஞ்சாயத்து காமெடிப் பொங்கலும் ஒளிபரப்பாகிறது. ஆதித்யா டிவியில் நகைச்சுவை தர்பார் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

    சிவகார்த்திக்கேயன் ஸ்பெசல்

    சிவகார்த்திக்கேயன் ஸ்பெசல்

    ராஜா ராணி திரைப்படத்தின் 100 வது நாள் கொண்டாட்டம் நிகழ்ச்சி தை முதல்நாள் ஒளிபரப்பாகிறது.

    நம் வாழ்க்கை நம் கையிலா? பிறர் கையிலா என்ற சிந்தனைப் பட்டிமன்றம் விஜய் டிவியில் பொங்கல் தினத்தன்று ஒளிபரப்பாகிறது.

    எங்க வீட்டுப் பிள்ளை சிவகார்த்திக்கேயன் என்ற சிறப்பு நிகழ்ச்சி பொங்கலன்று ஒளிபரப்பாகிறது.

    நவீன சரஸ்வதி சபதம்

    நவீன சரஸ்வதி சபதம்

    அதே நாளில் ஜெய் நடித்த நவீன சரஸ்வதி சபதம், ஆர்யா நடித்த ராஜா ராணி, விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படமும் ஒளிபரப்பாகிறது.

    கலைஞர் டிவியில் கலைவிழா

    கலைஞர் டிவியில் கலைவிழா

    கலைஞர் டிவியில் பொங்கல் பண்டிகையின் மூன்று நாட்களும் 175 விதமான கிராமிய கலைவிழா நடைபெற உள்ளது. இவற்றைத் தவிர பட்டிக்காடா பட்டணமா என்ற சிறப்பு நிகழ்ச்சியும், வருத்தப்படாத வாலிபர் சங்கம், பாஸ் என்ற பாஸ்கரன், ரத்த சரித்தரம், குருவி, வேல் போன்ற திரைப்படங்களும் ஒளிபரப்புகின்றனர். ஜனவரி 16ம் தேதி ராஜா ராஜாதான் என்ற இசை நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகிறது.

    புஷ்வனம் குப்புசாமி

    புஷ்வனம் குப்புசாமி

    ஜீ தமிழ் சேனலில் நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி நடுவராக இருக்கும் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது. சரத் குமார் நடித்த ஜக்குபாய் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

    கதிர்வேலன் காதல்

    கதிர்வேலன் காதல்

    உதயநிதி ஸ்டாலின் நடித்த கதிர்வேலன் காதல், என்னமோ ஏதோ படக்குழுவினரின் பேட்டியும் ஒளிபரப்பாகிறது. சின்னத்திரை நட்சத்திரங்களின் ஆடுகளம் என்ற நிகழ்ச்சியில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஒளிபரப்பாகிறது.

    மூன்று பேர் மூன்று காதல்

    மூன்று பேர் மூன்று காதல்

    சேரன் நடிப்பில் வெளியான மூன்று பேர் மூன்று காதல் திரைப்படம் ஜனவரி 15 அன்று ஜீ தமிழில் ஒளிபரப்பாகிறது. 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு தலைப்பொங்கல் கொண்டாடும், சின்னத்திரை, சினிமா நட்சத்திரங்களில் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மாலை 5 மணிக்கு விமல், பிந்து மாதவி நடித்த தேசிங்கு ராஜா திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

    ராவணன், பாண்டியநாடு

    ராவணன், பாண்டியநாடு

    தீபாவளி ரிலீசான பாண்டியநாடு திரைப்படம் பொங்கல் தினத்தன்று காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மாலை 7 மணிக்கு ராவணன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன், புஷ்பவனம் குப்புசாமி வழங்கும் நாட்டுப்புற பொங்கல் கொண்டாட்டம் ராஜ்டிவியில் ஒளிபரப்பாகிறது.

    எம்.ஜி.ஆர் திரைப்படங்கள்

    எம்.ஜி.ஆர் திரைப்படங்கள்

    பொங்கல் விருந்தாக ராஜ் டிவியில் எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப்பெண், மாட்டுக்கார வேலன் போன்ற திரைப்படங்கள் ஜனவரி 16ம் தேதி ஒளிபரப்பாகிறது. ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சேனலில் குடியிருந்த கோவில் திரைப்படமும், ரகசிய போலீஸ் 115 திரைப்படமும் ஒளிபரப்பாகிறது.

    ஜெயா டிவியில் பொங்கல்

    ஜெயா டிவியில் பொங்கல்

    நடிகர் சிவகார்த்திக்கேயன், கல்லூரி மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பட்டிமன்றமும், திரைப்பட நடிகர், நடிகையர்களின் பேட்டியும் ஒளிபரப்பாகிறது.

    பவர் ஸ்டார் ஸ்பெசல்

    பவர் ஸ்டார் ஸ்பெசல்

    புதுயுகம் சேனலில் பவர் ஸ்டார் கலக்கும் கண்ணா கரும்பு தின்ன ஆசையா? என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ஜில்லா, வீரம், நிமிர்ந்து நில் திரைப்படக்குழுவினரை சந்தித்து உரையாடுகின்றனர். கிராமிய இசைக்கலைஞர்கள் வேல்முருகன், மகிழினி மணிமாறன், சின்னப்பொண்ணு ஆகியோர் பங்கேற்கும் பண்பாட்டுப் பொங்கல் நிகழ்ச்சியும் புதுயுகத்தில் ஒளிபரப்பாகிறது.

    English summary
    This Pongal will be a special one for Tamil cinema lovers. Besides the new releases "Jilla" and "Veeram", there will be a plethora of latest films which will be screened on popular television channels. The audience will have a variety of film choices to watch and enjoy. Here is the list of films getting telecast this Pongal festival.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X