twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொங்கல்... மக்கள் டிவியின் மண் வாசனை நிகழ்ச்சிகள்

    By Mayura Akilan
    |

    பண்டிகைகள் வந்தாலே கொண்டாட்டத்திற்கு குறைவிருக்காது. மக்களைக் குதூகலத்துடன் உற்சாகப்படுத்த நிறுவனத்தினரும் களம் இறங்கிவிடுவார்கள். ஒருநாள் விடுமுறை என்றாலே சிறப்பு நிகழ்ச்சிகள் களை கட்டும். அதுவும் பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த நான்கு நாட்களும் மக்களைக் கவரும் மண்வாசனையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது மக்கள் தொலைக்காட்சி.

    ஜனவரி 13 போகிப் பண்டிகைத் தொடங்கி ஜனவரி 16 காணுப் பொங்கல் வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான நிகழ்ச்சியோடு உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர் தமிழர்கள் வரை அனைவரையும் உற்சாகப்படுத்த வருகிறது

    சினிமாத்தனமில்லாத கிராமிய மண் மணம் கமழும் நிகழ்ச்சிகளை சுவை குன்றாமல் ரசித்து மகிழ நான்கு நாட்களும் ஒளிபரப்புகிறது மக்கள் தொலைக்காட்சி. பொங்கல் வைப்பது, கும்மி, கிராமிய விளையாட்டு என நகரவாசிகள் அனைவரும் ரசித்து கொண்டாடலாம்.

    போகியை வரவேற்கும் பறை

    போகியை வரவேற்கும் பறை

    போகிப் பண்டிகை தினத்தில் பழையன கழிந்து புதியன புகுவதை வரவேற்க பறை அடிப்பார்கள். மக்கள் டிவியில் காலை 6.03 மணிக்கு பறை சங்கமம் ஒளிபரப்பாகிறது. இதைத் தொடர்ந்து பாவை இசைவிழா, மங்கல இசை ஒளிபரப்பாகிறது. இதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

    பேசித்தீர்க்கலாம் வாங்க

    பேசித்தீர்க்கலாம் வாங்க

    பொங்கல் திருநாளின் சிறப்பு நிகழ்ச்சியாக போகி தொடங்கி காணுப் பொங்கல் வரை நான்கு நாட்களும் பேசித்தீர்க்கலாம் வாங்க நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. காலை 10.30 மணிக்கு தமிழ் அறிஞர்கள் காரசாரமாக விவாதிக்கின்றனர்.

    ஐவகை நில விழா

    ஐவகை நில விழா

    போகிப்பண்டிகை தினத்தன்று குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களில் கொண்டாடப்படும் ஆடல் பாடல் நிகழ்வுகளை பதிவு செய்துள்ளது மக்கள் தொலைக்காட்சி. தமிழர்கள் உணவுகளை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்யும் உணவுத்திருவிழா போகிப் பண்டிகையன்று இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    தைத்திருநாளில் கொண்டாட்டம்

    தைத்திருநாளில் கொண்டாட்டம்

    ஜனவரி 14ம் தேதி தைத் திருநாள் தினத்தில் சென்னையின் அடுக்குமாடி குடியிருப்பில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை காலை 8.30 மணிக்கு ஒளிபரப்புகின்றனர். காலை 10.30 மணிக்கு இசையுடன் நான் என்ற நிகழ்ச்சியில் திரைப்பட இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

    மக்கள் பொங்கல்

    மக்கள் பொங்கல்

    மக்கள் தொலைக்காட்சியினர் ஒரு கிராமத்தை தத்தெடுத்து பொங்கல் பண்டிகைக்குத் தேவையானதை வழங்கி அவர்களுடன் பொங்கல் கொண்டாடுகின்றனர். இது தை திருநாளில் மாலை 5.02 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    அன்புமணி ராமதாஸ் மண்வாசனை

    அன்புமணி ராமதாஸ் மண்வாசனை

    பொங்கல் பண்டிகை மண் மணம் கமழும் பண்டிகை. இதனை அதன் மணம் மாறாமல் தனது சொந்த கிராமத்தில் கொண்டாடியுள்ளார் அன்புமணி ராமதாஸ். இந்த நிகழ்வை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது மண் வாசனை நிகழ்ச்சி. இது தைத்திருநாள் அன்றும் மாட்டுப்பொங்கல் அன்றும் இரவு 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது,

    கால்நடைகளை சிறப்பிக்கும் பொங்கல்

    கால்நடைகளை சிறப்பிக்கும் பொங்கல்

    மாட்டுப்பொங்கல் அன்று கோ நடை என்ற மாடுகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாறி வரும் அவலத்தை உணர்த்துகிறது எங்கே பொங்கல் நிகழ்ச்சி. இது ஜனவரி 15ம் தேதி காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    ஜல்லிக்கட்டு

    ஜல்லிக்கட்டு

    மாட்டுப்பொங்கலன்று விழாக்கால கலைகள் மாலை 5.02 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதைத் தொடர்ந்து மாலை 6.05 மணிக்கு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஒளிபரப்பாகிறது. இதைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் கொண்டாடிய மண்வாசனை இரண்டாம் பாகம் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    களை கட்டும் காணும் பொங்கல்

    களை கட்டும் காணும் பொங்கல்

    காட்டுக்குள் நடைபெறும் பொங்கல் திருவிழாவை பதிவு செய்துள்ளது மக்கள் தொலைக்காட்சி மலைவாழ் மக்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகை ஜனவரி 16ம்தேதி மதியம் 12.02 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நகரங்களில் காணும் பொங்கல் கொண்டாட்டம் களை கட்டும். மெரீனா கடற்கரை, கேளிக்கை பூங்காக்களில் கூட்டம் அலை மோதும், இதனைப் பதிவு செய்கிறது ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்ச்சி. இது பிற்பகல் 3.02 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    கிராமிய விளையாட்டுக்கள்

    கிராமிய விளையாட்டுக்கள்

    கிராமங்களில் பண்டிகைகள் விளையாட்டு நிகழ்வுகளோடு நடைபெறும். மறந்து போன விளையாட்டுக்களை மக்களுக்கு நினைவுபடுத்துகிறது கிராமிய விளையாட்டுக்கள் காணும் பொங்கலன்று இரவு 7.02 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கல்லூரி மாணவிகள் கொண்டாடும் பொங்கும் இன்பம் நிகழ்ச்சி இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    English summary
    Makkal Tv will telecast Pongal special programs in Manvasanai, Pesi Therkalam vanga on January 13 to January 16.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X