»   »  ஒருநாள் கூத்து, றெக்க, இருமுகன், சேதுபதி... ஜீ தமிழில் பொங்கலுக்கு 4 படங்கள்

ஒருநாள் கூத்து, றெக்க, இருமுகன், சேதுபதி... ஜீ தமிழில் பொங்கலுக்கு 4 படங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜீ தமிழ் தொலைக்காட்சி ஜனவரி 14 மற்றும் 15 தேதிகளில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளது.

ஜீ தமிழில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளின் தொடக்கமாக, ஜனவரி 14 ஆம் தேதி காலை 9 மணிக்கு மக்களின் உள்ளம் கவர்ந்த குழந்தை நட்சத்திரங்களின் "சிறப்பு ஜுனியர் சூப்பர்ஸ்டார்ஸ்" நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.


ஒருநாள் கூத்து

ஒருநாள் கூத்து

காலை 11 மணிக்கு, தினேஷ், கருணாகரன், மியா ஜார்ஜ் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்த பொங்கல் சிறப்புத் திரைப்படமாக "ஒரு நாள் கூத்து" ஒளிபரப்பாகிறது.


நட்சத்திரக் கொண்டாட்டம்

நட்சத்திரக் கொண்டாட்டம்

பிற்பகல் 2 மணிக்கு நேயர்களின் மனம் கவர்ந்த ஜீ தமிழ் நட்சத்திரங்கள் பங்கேற்கும் "நட்சத்திரக் கொண்டாட்டம்" ஒளிபரப்பாக உள்ளது. பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இந்நிகழ்ச்சியில் ஜீ தமிழ் நட்சத்திரங்கள் பங்கேற்று மக்களை மகிழ்விக்க உள்ளனர்.


விஜய் சேதுபதி படங்கள்

விஜய் சேதுபதி படங்கள்

மாலை 4 மணிக்கு விஜய் சேதுபதியின் ஆக்ஷன் படமான "றெக்க" ஒளிபரப்பாக உள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜனவரி 15 ஆம் தேதியும் பொங்கல் தின பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தொடர உள்ளன. காலை 11 மணிக்கு விஜய் சேதுபதியின் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் "சேதுபதி" ஒளிபரப்பாக உள்ளது.


இருமுகன்

இருமுகன்

பிற்பகல் 1:30 மணிக்கு, தென்னிந்தியாவில் சாதித்த பெண் பிரபலங்களை கெரளவிக்கும் "ஜெ.எஃப்.டபில்யூ. (JFW) விருது" வழங்கும் விழா ஒளிபரப்பாக உள்ளது. பிற்பகல் 3:30 மணிக்கு ரா ஏஜென்டாகவும், அழிவுகரமான விஞ்ஞானியாகவும் - இரு வேறு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து அசத்திய நடிகர் விக்ரமின் சூப்பர் ஹிட் திரைப்படமான "இருமுகன்" ஒளிபரப்பாகிறது.


English summary
Zee Tamizh Pongal 2017 programs Orunaal Koothu Rekka and Irumugan are the premier films on Zee Tamil TV during Pongal festival.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil