»   »  பொங்கலன்று மறக்காம கத்துக்குட்டி பாருங்க!

பொங்கலன்று மறக்காம கத்துக்குட்டி பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரையில் பூக்கும் சில நல்ல மலர்களை ரசிகர்கள் பெரிதாக கவனிக்கத் தவறுகிறார்களே என்ற ஆதங்கம் ஒவ்வொரு ஆண்டும் எழாமல் இருப்பதில்லை, கத்துக்குட்டி போன்ற படங்கள் பெரும் வெற்றி பெறாமல் போகும்போது.

கத்துக்குட்டி நம் மண் சார்ந்த கதை. விவசாயமும் விவசாயியும் அழியக் கூடாது என்று குரல் கொடுத்த படம். மீத்தேன் வாயு எடுக்கப்பட்டால், தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்ன ஆகும் என்பதை பொட்டிலடித்த மாதிரி சொன்ன படம்.

ஆனால் அந்தப் படம் எதிர்ப்பார்த்த பெரிய வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் படம் வெளியான முதல் வாரமே தஞ்சைப் பகுதிகளில் மீத்தேன் எடுக்க அரசு தடைப் போட்டது. அது அந்தப் படத்துக்குக் கிடைத்த அடையாள வெற்றி.

ஜீ டிவி

ஜீ டிவி

இப்போது கத்துக்குட்டி படத்தை வரும் பொங்கல் தினத்தன்று ஜீ தமிழ் டிவி ஒளிபரப்பு செய்கிறது. தியேட்டரில் போய் பார்க்கத் தவறியவர்கள், அட்லீஸ்ட் டிவியிலாவது பாருங்கள்.

பாபநாசம்

பாபநாசம்

பொங்கல் தினத்தன்று சன் டிவியில் மாலை 6 மணிக்கு கமல், கெளதமி நடித்த பாபநாசம் படம் ஒளிபரப்பாகிறது.

சிங்கம், ஜில்லா

சிங்கம், ஜில்லா

பொங்கல் தினத்தன்று சன் டிவியில், 11 மணிக்கு சூர்யா நடித்த சிங்கம் படமும் 2 மணிக்கு விஜய் நடித்த ஜில்லா படமும் ஒளிப்பரபாகின்றன.

10 எண்றதுக்குள்ள

10 எண்றதுக்குள்ள

விஜய் டிவியில் விக்ரம், சமந்தா நடித்த பத்து எண்றதுக்குள்ள ஒளிபரப்பப்படுகிறது. அதர்வா நடித்த சண்டிவீரனும் அன்றைய தினம் விஜய் டிவில் ஒளிபரப்பாகிறது.

என்னை அறிந்தால்

என்னை அறிந்தால்

ஜெயா டிவியில் அஜீத் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படம் ஒளிபரப்பாகிறது.

English summary
Zee Tamil Channel will be telecasted Kaththukutti Tamil movie on Pongal day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil