பொன்னியின் செல்வன் இசை -ட்ரெயிலர் வெளியீட்டு விழா.. எந்த சேனல்ல ஒளிபரப்பாகுது தெரியுமா?

சென்னை : நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம்.

இந்தப் படத்தின் டீசர், பாடல்கள் உள்ளிட்டவை முன்னதாக சென்னை மற்றும் ஐதராபாத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றன.

தொடர்ந்து படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடும் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டன.

பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்

நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஜெயராம், பார்த்திபன் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம்தான் பொன்னியின் செல்வன். இந்தப் படம் இன்னும் 14 நாட்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அமெரிக்காவில் இதன் புக்கிங் துவங்கப்பட்டுள்ளது.

பிரமோஷனை துவக்கிய படக்குழு

பிரமோஷனை துவக்கிய படக்குழு

இதனிடையே படத்தின் பிரமோஷன்களை படக்குழு துவக்கியுள்ளது. நேற்றைய தினம் ஜெயம் ரவியை மையமாக வைத்து ஸ்டில்ஸ்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், இன்றும் புதிய ஸ்டில்ஸ்களை வெளியிட்டுள்ளது. இதனிடையே இன்றைய தினம் படத்தின் பிரமோஷனல் டூரை சென்னையில் படக்குழு துவக்கியுள்ளது.

சிறப்பு விருந்தினர்கள்

சிறப்பு விருந்தினர்கள்

முன்னதாக படத்தின் டீசர், பாடல்கள் அடுத்தடுத்து மிகவும் பிரம்மாண்டமாக சென்னையில் இருமுறை மற்றும் ஐதராபாத்திலும் நடத்தப்பட்டன. தொடர்ந்து படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டன. இதில் நீண்ட நாட்களுக்கு பிறகு கமல் மற்றும் ரஜினி இருவரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்பித்தனர்.

அடுத்தடுத்த பிரமோஷன்கள்

அடுத்தடுத்த பிரமோஷன்கள்

இதையடுத்து அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழு மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையில் படத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ள நிலையில், மேலும் இரண்டு பாடல்களையும் படக்குழு தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளன. தொடர்ந்து போஸ்டர்கள், பாடல்கள் என பொன்னியின் செல்வன் ட்ரெண்டிங்கிலேயே உள்ளது.

சன் டிவியில் வெளியாகும் இசை வெளியீடு

சன் டிவியில் வெளியாகும் இசை வெளியீடு

கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சி சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான கலக்கல் ப்ரமோவை தற்போது சன் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சுவாரஸ்யங்கள் நிறைந்த இசை வெளியீடு

சுவாரஸ்யங்கள் நிறைந்த இசை வெளியீடு

இந்த இசை வெளியீட்டு விழாவில் பல சுவாரஸ்யங்கள் நடந்தன. அவை அனைத்துமே சமூக வலைதளங்களில் சிறிய சிறிய வீடியோக்களாக வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றன. கமல் மற்றும் ரஜினி இருவரும் இந்த ப்ராஜெக்ட் குறித்த பல அனுபவங்களை பகிர்ந்த நிலையில், இவை அனைத்தையும் ஒருசேர சன் டிவியில் விரைவில் காணலாம்.

சுவாரஸ்யங்கள் நிறைந்த இசை வெளியீடு

சுவாரஸ்யங்கள் நிறைந்த இசை வெளியீடு

இந்த இசை வெளியீட்டு விழாவில் பல சுவாரஸ்யங்கள் நடந்தன. அவை அனைத்துமே சமூக வலைதளங்களில் சிறிய சிறிய வீடியோக்களாக வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றன. கமல் மற்றும் ரஜினி இருவரும் இந்த ப்ராஜெக்ட் குறித்த பல அனுபவங்களை பகிர்ந்த நிலையில், இவை அனைத்தையும் ஒருசேர சன் டிவியில் விரைவில் காணலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X