இது பப்ளிக் நியூசன்ஸ்.. இந்த கருமத்தை எல்லாம் ஏன் காட்றீங்க.. பிக் பாஸை விளாசிய பிரசாந்த் ரங்கசாமி!
சென்னை: இந்தி பிக் பாஸ் சீசன் போல தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி இல்லையே என ஒரு பக்கம் அங்கே நடக்கும் காமக் கூத்துகளை எல்லாம் ஷேர் செய்து புலம்பி வரும் ரசிகர்களுக்கு இந்த முறை கவர்ச்சி பிரபலங்கள் பலரை உள்ளே இறக்கியதுமே இது குழந்தைகள் பார்க்கத் தகுதியில்லாத ஷோ என்பது புரிந்திருக்கும்.
மேலும், நீச்சல் குளத்துக்கு அனுமதி, புதிதாக சொகுசு ஜக்குஸி என இந்த முறை லவ் டிராக், கிளாமர் ரூட், எல்லை மீறிய ஆபாசம் என அனைத்து விஷயங்களையும் இறக்கும் முடிவிலேயே பிக் பாஸ் சீசன் 9 ஆரம்பிக்கப்பட்டுள்ளது என பலரும் விமர்சித்து வந்த நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி அதை உண்மையாக்கும் முயற்சியில் செயல்பட்டு வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் பிக் பாஸ் ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கே சென்று போராடுவோம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று கொந்தளித்த நிலையில், தற்போது விமர்சகரும் நடிகருமான பிரசாந்த் ரங்கசாமி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக பதிவிட்டுள்ளார்.
என்ன கன்றாவி இது?: பிக் பாஸ் வீட்டில் ஆதிரை மற்றும் எஃப்ஜே இருவரும் அடிக்கும் கூத்துகள் மற்றும் அரோரா - துஷார் அடிக்கும் கூத்துகள் தான் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கின்றன. பிக் பாஸ் நிகழ்ச்சியை பலான நிகழ்ச்சியாக மாற்றி வருகின்றனர் என்றும் தமிழ் ரசிகர்கள் மற்றும் அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் இந்த நிகழ்ச்சியை பார்த்தால் கெட்டுப் போய் விடுவார்கள் என ஏகப்பட்ட கண்டன குரல்கள் பிக் பாஸ் சீசன் 9க்கு எதிராக வந்துள்ளது.
பப்ளிக் நியூசன்ஸ்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் எஃப்ஜே ஆதிரையை கட்டிப் பிடித்து அலப்பறையை கிளப்பி வரும் நிலையில், அதை பார்த்த பிரசாந்த் ரங்கசாமி, "இது பப்ளிக் நியூசன்ஸ்.. இந்த ஷோவை குழந்தைகள் எல்லாம் பார்த்து வருகின்றனர். டீன் ஏஜ் ரசிகர்களுக்கு என்ன கருமத்தை கத்துக் கொடுக்கிறீங்க விஜய் டிவி? இந்த அசிங்கத்தை எல்லாம் ஏன் ஒளிபரப்ப வேண்டும்" என கேள்வி எழுப்பி உள்ளார். பிக் பாஸ் தமிழ் சீசன் 9ல் ஆபாச போட்டியாளர்கள், சர்ச்சையான பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றுள்ளதாகவும் அந்த நிகழ்ச்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











