»   »  மண்வாசனை சீரியல் நடிகை பிரதியுஷாவின் கடைசி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்

மண்வாசனை சீரியல் நடிகை பிரதியுஷாவின் கடைசி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த அழகாக நடிகை பிரதியுஷா கடந்த 2002ம் ஆண்டு காருக்குள் தனது காதலருடன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 13 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே பெயர் கொண்ட அழகான டிவி சீரியல் நடிகை தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மின் விசிறியில் துப்பட்டாவினால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சீரியல் நடிகை பிரதியுஷா, தனது மரணத்திற்கு முன்னர் கடைசியாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் கடைசியாக " எனது மரணத்திற்கு பிறகும் கூட எனது முகத்தை உன்னை விட்டு திருப்ப மாட்டேன்" என்று ஹிந்தியில் வைத்திருக்கிறார்.

ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிந்தி டப்பிங் சீரியலான மண் வாசனைக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகும் அந்த சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் நடிகைக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இந்த சீரியலில்தான் ஆனந்தியாக அறிமுகமானார் பிரதியுஷா.

பிரதியூஷா என்றால் பலருக்கும் தெரியாத நிலையில் மண்வாசனை ஆனந்தி என்றால் நம் வீட்டில் தாய்மார்களின் கண்கள் விரிந்து சோகத்தில் ஆழ்ந்துவிடுகின்றன.

ஆனந்தி என்னும் கதாபாத்திரம் நம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். சிறு வயது பாத்திரத்தில் அவிகா கோரும், வளர்ந்த நாயகியாக பிரதியுஷாவும் நடித்துள்ளனர். இவருக்கு ரசிகர்கள் அதிகம்.

அந்த சீரியலின் கதையே பெண் பிள்ளைகளுக்கு நடக்கும் கொடுமைகளை எடுத்துச் சொல்லும் சீரியல் தான் முக்கியமாக குழந்தைத் திருமணம், அதற்காக நடக்கும் போராட்டம், ஒரு குழந்தை திருமணம் செய்துகொண்டால் என்னென்ன கொடுமைகளை பிஞ்சு வயதில் அனுபவிக்கிறார் என்பதே சீரியலின் கதை.

அழகான நடிகை

அழகான நடிகை

அழகான இளம் நடிகையான பிரதியுஷா நேற்று மாலையில் மும்பையில் உள்ள தனது வீட்டில் துப்பட்டாவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார் பிரதியூஷா. இது அவரது தோழிகளிடையை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வலிமையான பெண்

வலிமையான பெண்

இதுகுறித்து அவரது தோழியும், நடிகையுமான டோலி பிந்த்ரா கண்ணீருடன் பேசியுள்ளார் , பிரதியூஷா கண்டிப்பாக தற்கொலை செய்திருக்க முடியாது. அவள் மிகவும் வலிமையான பெண். எனவும் இது திட்டமிட்ட கொலையாகவே தெரிவதாகக் கூறியுள்ளார். மேலும் அவரது நண்பரும் நடிகருமான அஜஸ் கானும் இது கொலையாக இருக்கலாம் என்று பதிவு செய்துள்ளார்.

கடைசி வாட்ஸ் அப் பதிவு

கடைசி வாட்ஸ் அப் பதிவு

பிரதியூஷா கடந்த ஓரிரு மாதங்களாகவே சரியான மனநிலையில் இல்லை என ஒரு தரப்பில் சொல்லபப்டுகிறது. அவரது வாட்ஸப் ஸ்டேட்டஸில் கடைசியாக " எனது மரணத்திற்கு பிறகும் கூட எனது முகத்தை உன்னை விட்டு திருப்ப மாட்டேன்" என ஹிந்தியில் வைத்திருக்கிறார்.

கடந்த நவம்பர் மாதத்தில் கடைசியாக ஒரு ட்வீட்டை டிவிட்டர் பக்கத்தில் போட்டுள்ள பிரதியூஷா அதன் பிறகு ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட தளங்களில் ஈடுபாடு செலுத்தவில்லை.

அவிகா கோர்

அவிகா கோர்

மண்வாசனை தொடரில் சிறு வயது ஆனந்தியாக நடித்த அவிகா கோர், அதிர்ச்சியடைந்துள்ளார், பிரதியுஷாவின் மரணத்தை தன்னால் நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார். மிகவும் தன்னம்பிக்கையான பெண் பிரதியுஷா, எப்போது சந்தோசமாகவே இருப்பார் அவருக்கு மன அழுத்தம் இருந்ததை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார் அவிகா கோர்.

பிரதியுஷாவிற்கு பிரச்சினை

பிரதியுஷாவிற்கு பிரச்சினை

இந்நிலையில் அவரது நண்பர்கள் பலரும் ராகுல் சிங்கால் சில நாட்களாகவே அவர் பிரச்னைகளை சந்தித்துள்ளதாகவும், எல்லாருடைய பிறந்த நாள் பார்ட்டிக்கும் தவறாது செல்லும் பிரதியூஷா அண்மையில் நடந்த பல நிகழ்ச்சிகளைத் தவிர்த்து வந்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேல் பிரதியூஷாவின் பிறந்தநாள் நிகழ்ச்சி முடிவதற்குள்ளாகவே காதலர் ராகுல் சிங் கிளம்பிவிட்டதையும் மறக்க முடியாது என்கிறார்கள் நண்பர்கள்.

இரண்டாவது பிரதியுஷா

இரண்டாவது பிரதியுஷா

தவசி படத்தில் நடித்த பிரதியுஷாவின் தற்கொலை 2002ம் ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது மண்வாசனை நாயகியின் தற்கொலையும் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

English summary
TV actress Prathiyush last status message on Whatsapp read, “Marke bhi muh na tuzse modana” (even after death won’t be turning my face away from you) with a smiley.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil