»   »  நான் சீரியலில் அன்பானவள்... நிஜத்தில் அடங்காதவள்... சொல்வது "பிரியமானவள்" கவிதா!

நான் சீரியலில் அன்பானவள்... நிஜத்தில் அடங்காதவள்... சொல்வது "பிரியமானவள்" கவிதா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரியமானவள் தொடரின் அன்பான மருமகள் கவிதா நிஜத்தில் அதிரடியான பெண்ணாம். கவிதாவாக நடித்துள்ள நிரஞ்சனிக்கு திண்டுக்கல் பூர்வீகமாம். இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

பெற்றோர் சென்னையில் செட்டில் ஆகவே பள்ளி படிப்பு, கல்லூரி என சென்னை பெண்ணாக மாறிவிட்டார். எஸ் ஆர் எம் கல்லூரியில் விஸ்காம் முடித்த கையோடு மீடியா பக்கம் ஒதுங்கி விட்டாராம்.

Priyamanaval Kavitha's original character

என்னோட கலகலப்பான குணத்துக்காகவே விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க என்று கூறும் நிரஞ்சனி, அப்பாவோட பர்மிஷனோட அழகி சீரியல் ஆடிஷன் கலந்துக்கிட்டேன். நிறைய மாடலிங்...சினிமா சான்ஸ் கூட வந்தது. இப்போ பிரியமானவள் சீரியலில் அன்பான, அடக்கமான மருமகளாக நடிக்கிறேன் என்கிறார் நிரஞ்சனி.

Priyamanaval Kavitha's original character

சீரியல் கவிதாக்கும், நிஜ நிரஞ்சனிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அவந்திகா ஆன் ஸ்கீரினில் மட்டும்தான் என்னை கொடுமை படுத்துவா. வெளில அவளைத்தான் நான் கொடுமைப்படுத்தறேன். நிஜத்தில் கவிதா டெரர்...அவந்திகா அப்பாவி என்கிறார் நிரஞ்சனி.

நம்ப முடியலையேம்மா...

English summary
Here is the Priyamanaval serial heroine Kavitha's original character.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil