»   »  இப்படி ஒரு மாமியார் கிடைச்சா எப்படி இருக்கும்... அப்படித் தாங்கும் 'பிரியமானவள்'!

இப்படி ஒரு மாமியார் கிடைச்சா எப்படி இருக்கும்... அப்படித் தாங்கும் 'பிரியமானவள்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய மெகா தொடர் பிரியமானவள். இதனை விகடன் நிறுவனத்தினர் தயாரித்து வழங்குகின்றனர்.

ஐந்தாண்டுகளுக்கும் மேலாக சன் டிவியின் 9 மணி ஸ்லாட்டை பிடித்து வைத்திருந்தது தென்றல் சீரியல். கடந்த வாரத்தோடு தென்றல் ஓய்வு பெற்று விட, தற்போது அந்த இடத்தைப் பிடித்திருக்கிறார் ‘பிரியமானவள்'

புரோமோக்களிலேயே நல்ல மாமியாரின் கதையைச் சொல்லப் போகிறார்கள் என்பதை பூடகமாகக் கூறி விட்டதால், குடும்பத்தலைவிகள் மத்தியில் இத்தொடர் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

புதிய மெகாத் தொடர்...

புதிய மெகாத் தொடர்...

அதன்படி, கடந்த 19ம் தேதி முதல் ஒளிபரப்பாகத் தொடங்கி விட்டது பிரியமானவள். இது திங்கள் முதல் சனி வரை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய மெகாதொடர் ஆகும்.

நல்ல மாமியார்...

நல்ல மாமியார்...

இந்த சீரியலில் நல்ல மாமியாராக களமிறங்கி இருப்பவர் நடிகை பிரவீனா. இவர் ஏற்கனவே விஜய் டிவியின் மகாராணி மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான். பிரவீனாவின் காதல் கணவராக சுபலேகா சுதாகர் நடித்துள்ளார்.

காதல்... மோதல்

காதல்... மோதல்

கதை இது தான். அகதி முகாமில் உள்ள உமா என்ற பெண்ணை காதலித்து கரம் பிடிக்கிறார் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

நான்கு மகன்கள்...

நான்கு மகன்கள்...

இந்தக் காதலால் தனித்து விடப்படும் பிரவீனா, சுபலேகா சுதாகர் ஜோடி சொந்த முயற்சியில் போராடி பெரும் பணக்காரர்கள் ஆகிறார்கள். இந்தத் தம்பதிக்கு நான்கு மகன்கள். ஆனால் மகள் இல்லாத குறை பிரவீனா மனதை வாட்டி வதைக்கிறது.

மகள் ஆசை...

மகள் ஆசை...

எனவே தனது நான்கு மகன்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களின் மனைவிகளை அதாவது தனது மருமகள்களை ‘மகள்' ஆக நினைத்து, தனது மகள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கிறார் பிரவீனா. மேலும், மகன்கள் மற்றும் அவர்களது குடும்பம் மூலம் தனது குடும்ப உறவுகளின் எண்ணிக்கையை உயர்த்த ஆசைப் படுகிறார்.

திருமணத் தடை...

திருமணத் தடை...

அவரது கனவு பலிக்கிறதா என்பது தான் கதைக்களம். பிரவீனா அகதி என்பது மகன்களின் திருமணத்திற்கு எவ்வாறு தடையாகிறது என்ற கோணத்தில் தற்போது காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

வில்லி பிம்பத்தை உடைத்து...

வில்லி பிம்பத்தை உடைத்து...

பொதுவாக சீரியல் மாமியார்கள் என்றாலே மகனையும், மருமகளையும் பிரிக்க சதி செய்வார், வில்லி என்ற பிம்பத்தை உடைத்து, நல்ல மாமியாராக களம் இறங்கியுள்ளார் இந்த பிரியமானவள்.

கொடுத்து வைத்த மருமகள்கள்...

கொடுத்து வைத்த மருமகள்கள்...

தொடங்கிய சில தினங்களிலேயே, வரும் நாட்களில் தனது மருமகள்களை பிரவீனா எப்படிக் கொண்டாடப் போகிறார் என வசனங்கள் மூலம் சுட்டிக் காட்டியுள்ளார் இயக்குநர். எனவே, பிரவீனாவுக்கு வாய்க்கப் போகும் அந்த அதிர்ஷ்டசாலியான மருமகள்கள் யார் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எதிர்பார்ப்பு...

எதிர்பார்ப்பு...

வழக்கம் போல நல்ல மாமியாரை அழ வைக்கும் கொடுமைக்கார மருமகள்களாக இல்லாமல், நல்ல பாசமான மருமகள்களாக பிரவீனாவுக்கு அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு குடும்பத் தலைவிகள் மத்தியில் உண்டாகி இருக்கிறது என்றால் மிகையில்லை.

காரணம், இன்னும் எத்தனை நாளைக்குத் தான் அழுகாச்சி குடும்ப சீரியல்களைப் பார்த்துக் கொண்டிருப்பது என்ற அவர்களின் ஆதங்கம் தான் .. இனி இரவில் சற்று சந்தோஷமாக பார்த்துக் கொண்டாட ஒரு சீரியல் வந்து விட்டது!

English summary
In Sun TV a new serial Priyamanaval is liked by the audience, which is telecasted from Monday to Saturday at 9 pm.
Please Wait while comments are loading...