»   »  மறுபடியும் பிரபாவை இழுத்துட்டுப் போயிட்டாரே அந்த டிசி... எப்படி அடிக்கப் போறாரோ..!

மறுபடியும் பிரபாவை இழுத்துட்டுப் போயிட்டாரே அந்த டிசி... எப்படி அடிக்கப் போறாரோ..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறுபடியும் பிரபாவை அந்த டிசி சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்று விட்டார். ஏற்கனவே துவைத்து, அயர்ன் பண்ணி அனுப்பி வைத்தார். இப்போது என்னா அடி விழப் போகுதோ போ..!

பிரியமானவளே சீரியலைப் பற்றித்தான் சொல்றோம் பாஸ்.. சீரியல் பார்த்துக் கொண்டிருந்த பலருக்கும் நேற்று பெரும் "பதைபதைப்பாக"த்தான் இருந்திருக்கும்... இருக்காதா பின்னே.. சீரியல் அப்படி, அது போகும் பாதை அப்படி.. காட்சிகள் அப்படியோ அப்படி.

இந்த டிசிக்கும், பிரபாவுக்கும் இடையே ஏற்கனவே "வாய்க்கால்" தகராறு. இப்போது "வரப்பு"த் தகராறாக அது மாறி விட்டது. இனி அடிக்கிற அடியில் பிரபாவின் "தாரை தப்பட்டை" கிழிந்து தொங்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆரம்பத்துல நல்லாத்தான் போச்சு

ஆரம்பத்துல நல்லாத்தான் போச்சு

பிரியமானவளே சீரியல் ஆரம்பத்தில் பாசமும், பந்தமுமாக - பாந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் இடையில் ஒரு கொலை விழுந்தது. அதையடுத்து ஆரம்பித்தது அதிரடி ஆக்ஷன் சீன்கள். கடந்த பல மாதங்களாக ஒரே அடிதடியாக போய்க் கொண்டுள்ளது இந்த சீரியல்.

இதுவும் அது மாதிரிதான்

இதுவும் அது மாதிரிதான்

வழக்கமான சீரியல் போல இல்லையே என்று ஆச்சரியப்பட்டவர்கள் எல்லாம் இப்போது அடப்பாவிகளா இதுலயும் இப்படித்தானா என்று கூறும் அளவுக்கு காட்சிகள் இதிலும் அடாவடியாக, அதிரடியாக உள்ளது.

போலீஸ் சித்திரவதை

போலீஸ் சித்திரவதை

போலீஸ் சித்திரவதையை ரொம்பத்தான் காட்டி பீதியை கூட்டி வருகிறார் இந்த சீரியலின் இயக்குநர். குறிப்பாக டிசி கேரக்டரில் வருபவரை கொடூரத்தின் உச்சமாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாருங்க, கடந்த வாரத்தில் அவரையும் விட்டு சாத்தி விட்டார்கள். அதாவது அவரையும் கைது செய்து அவர் கொடுத்த அதே "டிரீட்மென்ட்"டை அவருக்கும் கொடுத்து நையப்புடைத்து விட்டனர்.

பிரபா பயலோட ஒரே அக்கப்போர்

பிரபா பயலோட ஒரே அக்கப்போர்

அட, அவர் அடி வாங்கியதற்கு யார் காரணம்னு நினைக்கிறீங்க.. நம்ம பிரபாதாங்க. பிரபாவோட அம்மா உமாவையும், அண்ணி பூமிகாவையும் அந்த டிசி பொய் வழக்குல சிக்க வச்சு பாடாய்படுத்தியது உங்க எல்லாருக்கும் நல்லா தெரியும். அந்த கேஸ்லதான் பிரபாவையும் விசாரிக்கிறேன்னு சொல்லி பிடிச்சுட்டுப் போய் பொளந்து கட்டி உடம்பு முழுக்க போண்டாவா மாத்தி அனுப்பி வச்சார் அந்த டிசி.

கையை வச்சா விடுவாங்களா

கையை வச்சா விடுவாங்களா

இந்த நிலையில்தான் டிசியோட மாமானார் மேல கையை வச்சு சிக்கினார் பிரபா. என் மாமா மேலயாடா கைய வச்சு மவனே உன்னை கொல்லாம விட மாட்டேன்டா என்று வீடு தேடி வந்து கத்திக் களேபரப்படுத்தி விட்டார் டிசி. ஆனா அவரோட கெரகம்.. அந்த கூப்பாட்டை நம்ம கவிதா செல்போன் வீடியோவில் படமாக்க அதை வச்சு போட்டாரு பாருங்க நம்ம பிரபா ஒரு சூப்பர் பிளான்.

முட்டிக்கு முட்டி தட்டி

முட்டிக்கு முட்டி தட்டி

இவரே ஆட்களை செட்டப் செஞ்சு, மூத்த அண்ணி அவந்திகாவை அட்டாக் பண்ண வச்சு, எல்லாத்துக்கும் காரணம் டிசிதான்னு ஒரு சீன் கிரியேட் பண்ணி, டிசியை அரஸ்ட் பண்ண வச்சு... அதன் பிறகு ஏசி ரத்தினம், டிசியை முட்டிக்கு முட்டிக்கு தட்டி பிரித்து மேய்ந்து.. போன வாரம் ஒரே அக்கப் போரா போச்சு போங்க.

இருக்கு உனக்கு கச்சேரி

இருக்கு உனக்கு கச்சேரி

ஆனா இப்ப உமா கேஸை வாபஸ் வாங்கிட்டாங்க. டிசியும் வெளில வந்துட்டாரு. வேலையும் திரும்ப வந்திருச்சு.. விடுவாரா மாம்ஸு.. தோ.. நேத்து கிளம்பி வந்துட்டார் பிரபா வீட்டுக்கு. வாடி வாடி உனக்கு இருக்கு கச்சேரி என்று கழுத்தில் கையைப் போட்டு காவல் நிலையத்துக்கு இழுக்க.. வீடே கூடி அதைத்... தடுக்க.. அந்த நேரம் பாத்துப் போட்டாங்கே பாருங்க தொடரும்னு.. !

என்ன பண்ணப் போறாரோ!

என்ன பண்ணப் போறாரோ!

இன்னிக்குத் தெரியும் பிரபாவுக்கு நடக்கப் போற கச்சேரி என்னன்னு... இதுக்குத்தான் சொல்றது இளவட்டப் பசங்க, ரொம்ப சூடாகக் கூடாது, பாத்து சூதானமா நடக்கனும்னு.. எவன் கேக்குறான்... ஏற்கனவே அந்த டிசி போட்டு வெளுத்து அனுப்பி வச்சாரு. இப்படி அடிவாங்கிய "அல்சேஷன்" மாதிரி இருக்காரு.. என்ன பண்ணப் போறாரோ.. எப்படி அடிக்கப் போறாரோ..!

English summary
Priyamanavale "Prabha" is in yet another trouble and he is facing another arrest by the DCP.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil