»   »  ஏ... முத்தழகு மார்க்க பாத்து போடுபுள்ள....

ஏ... முத்தழகு மார்க்க பாத்து போடுபுள்ள....

Posted By:
Subscribe to Oneindia Tamil

குஷ்பு, ரம்பா, நமீதா, மீனா வரிசையில் நடன நிகழ்ச்சியின் நடுவராக சின்னத்திரைக்கு வந்துள்ளார் முத்தழகு பிரியாமணி. விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் புதிய நடன நிகழ்ச்சியா கிங் ஆஃப் டான்ஸ் நடன நிகழ்ச்சியின் நடுவராகியிருக்கிறார் பிரியாமணி.

பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமானவர் பிரியாமணி. பாலு மகேந்திரா படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தாலும், அவரை அடையாளம் காட்டியது என்னவோ பருத்திவீரன் முத்தழகுதான். சிறந்தநடிகைக்காக தேசிய விருது வாங்கும் அளவிற்கு திறமையான நடிகையாக இருந்தாலும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

Priyamani on Vijay TV Kings of Dance

கவர்ச்சியாக நடித்தும் வாய்ப்புகள் வராத காரணத்தால் குத்துப்பாட்டுக்கு ஆடி காலத்தை ஓட்டினார். தமிழில் கடந்த 2012ம் ஆண்டு நடித்த சாருலதா திரைப்படம்தான் தமிழில் அவர் கடைசியாக நடித்தது. சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானுடன் குத்துப்பாட்டுக்கு ஆடினார்.

மலையாள, கன்னட தொலைக்காட்சிகளில் நடன நிகழ்ச்சியின் நடுவாராக இருந்த பிரியாமணியை விஜய் டிவிக்கு அழைத்து வந்து விட்டனர். இன்னும் சிலவாரங்களில் ஒளிபரப்பாக உள்ள 'கிங் ஆப் டான்ஸ்' என்ற நிகழ்ச்சியின் நடுவராக அமர்ந்து மார்க் பாடப்போகிறாராம் பிரியாமணி.

விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 என்ற நடனநிகழ்ச்சியில் ராதா, சங்கீதா, பூர்ணிமா ஜெயராம், அம்பிகா ஆகியோர் நடுவராக இருந்தனர். இப்போது புதிய நிகழ்ச்சியான கிங் ஆப் டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராகியிருக்கிறார் பிரியாமணி.

இந்த நடன நிகழ்ச்சியை சரவணன் மீனாட்சி கவின், கல்யாணம் முதல் காதல் வரை பிரியா ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர். இந்த நடனநிகழ்ச்சி கடந்த ஜனவரி 30ம் தேதி முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது.

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியைப் போல கிங் ஆப் டான்ஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம். ஆரம்பமே அமர்களம் என்பதைப்போல கவின், பிரியாவின் கலக்கலான தொகுப்புடன் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஒளிபரப்பாகிறது கிங் ஆப் டான்ஸ். நம்ம முத்தழகு வர்றாக பார்த்து ரசிங்க.

English summary
Vijay TV New Dance Show Kings of Dance Competitive Maximum Numbers of Rounds and Elimination for Each Round after then Only Kings of Dance Show Conductance Best Performance for Quarter Final, Semi Final, Best Performance Round and Some Celebrities Round all are Most Expecting For this New Dance Show Kings of Dance in Vijay TV.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil