பாக்கவே கன்றாவியா இருக்கு.. வேலைக்கு ஆகாத பிக் பாஸ்.. முட்டு கொடுக்க வந்த பிரியங்கா, தீபக்!
சென்னை: முதல் கோணல் முற்றிலும் கோணல் என சொல்வார்கள் அது உண்மை என்பது போல, பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே பலவிதமான சர்ச்சைகளுடன் 30 நாள்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள், சிறப்பு விருந்தினராக புதிதாக மூன்று வந்து இருக்கிறார்கள். இதுகுறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை விஜய்சேதுபதி அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால், கமலுக்கு இருந்த அந்த வரவேற்பு இவருக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் கமலிடம் போட்டியாளர்கள் பம்மி இருப்பார்கள். ஆனால், விஜய் சேதுபதியிடம் போட்டியாளர்கள் மிஞ்சி இருக்கிறார்கள். யார் என்ன சொன்னாலும், அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் நான் என்ன செய்கிறேனோ அதைத்தான் செய்வேன் என பல போட்டியாளர்கள் இருந்ததால், கடந்த வாரம் ஒவ்வொரு போட்டியாளர்களையும் தனித்தனியாக வைத்து கிழி கிழியென கிழித்துவிட்டார் விஜய் சேதுபதி.

பார்வதியால் வந்த சண்டை: தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்ட் போட்டியாளர்களாக பிரஜன், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அமித் என நான்கு பேர் வந்துள்ளனர். இதில் வந்ததும் வராததுமாக, பார்வதிக்கு நல்லது செய்கிறேன் என சில விஷயத்தை திவ்யா கணேஷ் எடுத்துக் கூறினார். இதனால் கடுப்பான பார்வதி, என் தனிப்பட்ட விஷயத்தை பற்றி யாரும் பேச வேண்டாம். நான் ஒன்னும் குழந்தை இல்லை. நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறேன். உங்க வேலையை பாருங்கள் என சொல்லிவிட்டார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே பனிப்போர் நீடித்து கொண்டே வருகிறது.
அடிதடி சண்டை: எப்படியாவது பிக்பாஸ் நிகழ்ச்சியை சூடு பிடிக்க வைத்து விடலாம் என, கணக்கு போட்ட பிக் பாஸ் டீ, கம்ருதீன், பிரஜன் மற்றும் பிரவீனுக்கு இடையே சண்டையை மூட்டிவிட, கம்ருதீன், பிரவீன் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். கம்ருதீன் அடித்ததில் பிரவீன் தடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதனால் பிக் பாஸ் வீடே கலவர பூமியாக மாறியது. அதன் பிறகு தான் தெரிந்தது இது பிராங்க் என்று. இதைப்பார்த்த இணையவாசிகள் டிஆர்பிக்காக என்ன வேணும்னாலும் செய்வீங்களா என்று இதெல்லாம் ரொம்ப ஓவர் கேட்டு வருகின்றனர்.
முட்டுக்கொடுக்கும் பிரியங்கா: தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் முன்னாள் போட்டியாளரான பிரியங்கா, தீபக் மற்றும் மஞ்சுரி ஆகியோர் வந்துள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் குறைந்து விட்டதால், எப்படியாவது இவர்களை அனுப்பி சுவாரஸ்யத்தை கூட்டலாம் என்பதற்காக ஆஹா ஓஹோ ஹோட்டல் என்ற பெயரில் பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒரு ஹோட்டலில் நடத்த வேண்டும். அதற்கு சிறப்பு விருந்தினராக பிரியங்கா, தீபக், மஞ்சூரி ஆகியோர் வருகின்றனர். பிக் பாஸ் வீட்டை வைத்திருக்கிறார்கள் என்பதை பார்த்து அவர்கள் மதிப்பெண் கொடுக்க வேண்டும். இதற்காக போட்டியாளர்கள் விறுவிறுப்பாக தயாரானார்கள். என்னதான் இருந்தாலும் முந்தைய சீசனில் இருந்த சுவாரசியம் இந்த சீசனில் இல்லாதத பிரியங்கா இதற்கு முட்டு கொடுப்பதற்காக உள்ளே வந்து இருக்கிறார் என இணைவாசிகள் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











