»   »  புதுயுகம் கே2கேவில் நீங்களும் சமைக்கலாம்!

புதுயுகம் கே2கேவில் நீங்களும் சமைக்கலாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமையல் நிகழ்ச்சியை ரசிப்பதற்கு என்றே ஒரு தனி கூட்டமே உண்டு. ஆண், பெண் பேதமின்றி சமையல் நிகழ்ச்சிகளை ரசித்து அதே போல இல்லத்தரசிகளை செய்யச் சொல்லி ருசிப்பார்கள்.

புதுயுகம் தொலைக்காட்சியில் வெளிநாட்டு, இந்திய சமையல் கலைஞர்கள் இணைந்து பங்கேற்கும் கே2கே டாட் காம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

ஸ்ரீ பெரியகருப்பன், கலா ஆகியோர் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி தற்போது புத்தம் புதிய பொலிவுடன், வீடுதேடி வரப்போகிறதாம். இதுநாள்வரை சமையல் நிகழ்ச்சியை ரசித்த இல்லத்தரசிகள் இனி சமையல் குறிப்புகளை அனுப்பலாம். தேர்வாகும் சமையல் குறிப்புகளை தொலைபேசியில் கூறி சமைக்கச் சொல்லாம்.

வகை வகையான உணவுகள்

வகை வகையான உணவுகள்

இந்திய பாரம்பரிய உணவுகள்,உலகநாடுகளின் உன்னத உணவுகள்,ஆரோக்கிய உணவுகள்,ஸ்வீட்ஸ் & ஸ்னாக்ஸ் என வகை வகையான உணவு வகைகள் இடம்பெற இருக்கின்றன.

இல்லத்தரசிகள் பங்கேற்பு

இல்லத்தரசிகள் பங்கேற்பு

திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.00 மணி முதல் 1.30 மணி வரை புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

மேலும் ஒவ்வொரு வெள்ளிகிழமையும், நேயர்கள் கைமணத்தில் சமைத்த உணவுகளை, அதன் புகைப்படம்,செய்முறை விளக்கம், தேவையான பொருட்கள் மற்றும் உங்கள் புகைப்படத்தோடு சேனலுக்கு அனுப்ப வேண்டும்.

தொலைபேசி மூலமாக

தொலைபேசி மூலமாக

அதில் மிகச் சிறந்த உணவுகளை தேர்ந்தெடுத்து,தேர்வான நேயரை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரின் அறிவுரையின் படி அந்த உணவை நிகழ்ச்சி தொகுப்பாளர் சமைத்துக் கொடுப்பாராம்.

சமையல் குறிப்பு அனுப்புங்க

சமையல் குறிப்பு அனுப்புங்க

கே2கே டாட் காம் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.00 மணி முதல் 1.30 மணி வரை புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

அணுகவேண்டிய முகவரி :

வாட்ஸ் அப் நம்பர் : -9003091000

Email id - k2k@newgenmedia.in

English summary
Puthuyugam presents a new dazzling cookery show 'K2K.com'. Two cooking experts in one show. Foodies Kala and Sri Periya Karuppan together introducing yummy foods and recipes for your kitchen. K2K.com air on Monday to Friday daily between 1.00pm - 1.30pm in Puthuyugam TV.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil