»   »  சூணா பாணாவை நீயா நானா கோபிநாத் பார்த்தா? எப்படி இருக்கும்?

சூணா பாணாவை நீயா நானா கோபிநாத் பார்த்தா? எப்படி இருக்கும்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் டிவியில் ஞாயிறு இரவுகளில் நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ஏதாவது ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு இரு குழுக்கள் பேசி கலைவதுதான் நிகழ்ச்சியின் சிறப்பம்சம். சிறப்பு விருந்தினர்கள் வேறு வந்து தங்களின் கருத்துக்களை கூறுவார்கள். இந்த நிகழ்ச்சியையும், நீயா நானா ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், நிகழ்ச்சியின் இயக்குநர் ஆண்டனி ஆகியோரை கலாய்த்துள்ளது இந்த வாரம் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘இப்படி பண்றீங்களேம்மா நிகழ்ச்சி.

நீயா நானா சூட்டிங்கை நேரில் பார்த்திருந்தால் மட்டுமே சூணா பாணாவில் இப்படி சீன் பை சீன் ஓட்டமுடியும். என்னா ஒரு கலாய்ப்பு... இதை கோபிநாத் பார்த்திருப்பாரா என்று தெரியவில்லை.

Pudhuyugam TV Suna pana VS Vijay TV Neeya Naana

மைக் அவர்கிட்ட குடுங்க... வேற வேற வேற... என்று கூறும் கோபிநாத், டாக் பேக்கில் பேசும் இயக்குநர் ஆண்டனி... சிறப்பு விருந்தினர்களை பேச விடாமல் கூட கூட பேசும் கோபிநாத் என ஓட்டு ஓட்டு என்று ஒட்டி எடுத்திருக்கிறார் அரவிந்தராஜ்.

கோபிநாத் கோட் போட்டாலும் செய்தி, கோட் போடாவிட்டாலும் செய்தி. இந்த நிகழ்ச்சியில் மட்டுமல்ல டிவிட்டரிலும் ஒரே கலாய்ப்புதான். இப்போது டிவியிலும் கோபிநாத்தை கிண்டலடித்து நிகழ்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டனர்.

லட்சுமி ராமகிருஷ்ணனின் இப்படி பண்றீங்களேம்மா வார்த்தையை வைத்து கலாத்த விஜய் டிவிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது சூணா பாணா என்கின்றனர் ரசிகர்கள்.

English summary
Pudhuyugam TV telecast Ipaadi panrengalemma programme criticized on Vijay TV Neeya Naana.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil