Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
மணிமேகலையை நினைத்து நினைத்து.. ரொம்ப ஃபீலாகும் புகழ்!
சென்னை: குக் வித் கோமாளியின் இவர் இல்லாததால் தான் ரொம்ப பீலிங்காக இருக்கிறது என புகழ் பீலிங்காக போஸ்ட் போட்டதும் பதறிப்போன கன்டஸ்டன்ட் திருப்பி பதில் போட்டதுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விஜய் டிவியில் புதுசு புதுசாக எத்தனை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு ஆனாலும் எல்லாவற்றையும் விட அதிகமாக ரசிகர்களால் ரசிக்கப்படும் நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி தான் இருந்து வருகிறது.
இதற்கு முன்னர் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை விடவும் இந்த நிகழ்ச்சிக்கு தான் அதிகமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது .
உடம்பு
கலரிலேயே..
டிரஸ்
போட்டுக்
கொண்டு..
கலக்கிய
"முல்லை"
காவ்யா!

வாய் விட்டு சிரிப்போம்
பல பேர் ஒன்றாக இருந்து வாய்விட்டு சிரித்து பார்க்கும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி இருப்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனை நன்றாகவே ரசித்து வருகிறார்கள். அதில் பலர் இருந்தாலும் முக்கியமாக பெயரைச் சொன்னதுமே பலருக்கு சிரிப்பு வரும் நபராக புகழ்தான் இருந்து வந்து கொண்டிருக்கிறார். தற்போது இந்த நிகழ்ச்சியில் மூலமாக புகழும் நன்றாக பிரபலமாகிவிட்டார்.

புகழ் பெண் வேடம்
புகழ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இருந்தாலும் பெண் வேடமிட்டு இவர் கலக்கிய தால்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என அவரே கூறியிருக்கிறார். ஆனாலும் அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் தற்போது இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நன்றாக கிடைத்துக் கொண்டிருக்கிறது.

லூட்டிகள்
காரணம் அங்கு இருக்கும் கன்டஸ்டன்ட்களுடன் இவர் சேர்ந்து செய்யும் லூட்டிகளை அனைவரும் ரசித்து வருகின்றனர் .இந்த நிகழ்ச்சியை இதற்கு முன்பு பல சீசன்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் எல்லா சீசனை விடவும் இந்த சீசனுக்கு அதிகமான ரசிகர்கள் பெருகி வருகிறார்கள். காரணம் அதில் புதியதாக பல கன்டஸ்டன்ட் கள் களமிறங்கி இருப்பதும் ஒரு காரணம் .

ஷிவாங்கி
அஸ்வின், ஷிவாங்கி ,புகழ், மணிமேகலை ,சுனிதா, ஷகிலா, ரேகா ,பாபா பாஸ்கர் ,ரக்சன் ,ராமு மாஸ்டர் மற்றும் வெங்கடேஷ் பார்க் மாஸ்டர் என அனைவரும் இந்த நிகழ்ச்சிக்கு கலகலப்பாக கொண்டு போவதற்கு காரணமாக இருந்தாலும் அதில் ஒருவரை காணாமல் புகழ் தவிர்த்து வருகிறாராம். அது வேற யாரும் இல்லை மணிமேகலை தான்.

2 வாரம் மணிமேகலை லீவு
அவர் இரண்டு வாரமாக நான் இதில் கலந்து கொள்ளப்போவதில்லை ஆனாலும் இனி வரக்கூடிய எபிசோடுகளில் பயங்கரமாக பண்ணியிருப்பதாகவும் அதனால் ரசிகர்கள் என்னை மிஸ் பண்ண வாய்ப்பில்லை என கூறியிருந்தார் .ஆனால் இவரை காணாமல் இரண்டு வாரங்களாக இவருடைய ரசிகர்கள் அதிகமாகவே தேடி வருகின்றனர் .

காலில் அடிபட்டுருச்சு
அதுவும் இவருக்கு சின்னதாக காலில் அடிபட்டு விட்டது என தெரிந்ததும் பதறிப்போன ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்டுகளை போட்டு வந்தனர் .இந்தநிலையில் புகழும் அவருடைய பங்குக்கு தன்னுடைய பீலிங்கை ஷேர் பண்ணி இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் தன்னுடைய ஐடியில் இருந்து உன் ஞாபகம் தான் செல்லம் வருது மிஸ் யூ என மணிமேகலை டேக் பண்ணி போஸ்ட் போட்டு இருக்கிறார்.

மிஸ் யூடா புகழ்
இதனை பார்த்ததும் அதற்கு மிஸ் யூ டா எல்லாரையும் நானும் மிஸ் பண்ணுகிறேன் சீக்கிரம் வந்து விடுகிறேன் என மணிமேகலையும் பதில் கமெண்டுகளை போட்டிருக்கிறார். இவர்களின் இந்த போஸ்ட்டை பார்த்ததும் இவர்களுடைய ரசிகர்களும் மணிமேகலை சீக்கிரம் குணமாகி நிகழ்ச்சிக்கு வர வேண்டுமென தங்களுடைய ஆசைகளை தெரிவித்து வருகின்றனர்.

நல்ல ஷோதான்
அதுவுமில்லாமல் மணிமேகலையே இந்த அளவிற்கு மிஸ் பண்ணுகிறார்கள் எனவும் ஒவ்வொருவராக கமெண்டில் தெரிவித்து வருகிறார்கள் .இந்த போஸ்ட்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. என்ன சொல்லுங்க குக் வித் கோமாளி உண்மையிலேயே மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கான ஷோவாக மாறி விட்டது என்னவோ வாஸ்தவம்தான்.