Don't Miss!
- News
எனது மாப்பிள்ளை உதயநிதி ஸ்டாலின் கடுமையாக உழைக்கிறார்! மருமகன் பற்றி மனம் திறந்த மாமியார் ஜோதி!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Sports
பார்டர் கவாஸ்கர் கோப்பை - அதிக போட்டிகளில் வென்றது யார்? அதிக ரன்கள் அடித்தது யார்.. முழு விவரம்
- Technology
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Lifestyle
வார ராசிபலன் 05 February to 11 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமா இல்லன்னா பணஇழப்பு ஏற்படும்
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மீண்டும் சர்ப்ரைஸ் விசிட்... புகழின் வேற லெவல் என்ட்ரி... வெளியான ப்ரமோ!
சென்னை : குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளவர் புகழ். இந்த நிகழ்ச்சி அவருக்கு ரசிகர்களை மட்டுமின்றி ஏராளமான படவாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளது. முன்னணி நடிகர்களுடன் கூட்டணி அமைந்து நடித்து வருகிறார்.
கபாலி டயலாக் ரஜினி சாருக்கு பிடிக்கவில்லை!

குக் வித் கோமாளி புகழ்
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளவர் புகழ். இந்த நிகழ்ச்சி மூலம் கோலிவுட்டில் ஏராளமான படங்கள் வரிசைக் கட்டி வருகின்றன. சமீபத்தில் இவரது நடிப்பில் வலிமை, எதற்கும் துணிந்தவன் படங்கள் ரிலீசாகின. தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் ரிலீசாக உள்ளன.

அடுத்தடுத்த படங்கள்
சிவகார்த்திகேயனுடன் டான், அருண் விஜய்யுடன் யானை உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட வாய்ப்புகளை அஸ்வின் மற்றும் ஷிவாங்கி பெற்றுள்ள நிலையில், அந்த வரிசையில் புகழும் உள்ளார்.

முழுமையாக பங்கேற்காத புகழ்
இவருக்கு ஏற்றம் கொடுத்துள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது சீசன் 3யாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஷிவாங்கி முழுமையாக கலந்துக் கொண்டுள்ளார். ஆனால் புகழ் தொடர்ந்து பங்கேற்காமல் அவ்வப்போது கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

விஜய் டிவி புதிய ப்ரோமோ
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இவர் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு பல்வேறு குறும்புகளையும் காமெடி கலாட்டாக்களையும் செய்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் இந்த வாரமும் இவர் பங்கேற்கவுள்ளார். இதுகுறித்து ப்ரோமோ மூலம் விஜய் டிவி அறிவித்துள்ளது.

மீண்டும் பங்கேற்கும் புகழ்
இந்த நிகழ்ச்சியில் மீண்டும் பங்கேற்கும் புகழ் வழக்கம் போல தனது குறும்புகளை மீண்டும் செய்து போட்டியாளர்களை சிரிக்க வைக்கிறார். மேலும் இந்த ப்ரோமோவில் சார்பட்டா பரம்பரை நடிகர் சந்தோஷ் புகழை தூக்கும் காட்சிகள் சிறப்பாக காணப்படுகின்றன. அவர் புகழை கலாய்க்கும் காட்சிகளும் ப்ரோமோவில் காணப்படுகின்றன.
Recommended Video

புஷ்பா போல முயற்சி
மேலும் இந்த ப்ரோமோவில் புஷ்பா படத்தின் அல்லு அர்ஜுன் போல புகழ் செய்யும் சேட்டைகளும் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளன. இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சி வேறு லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் இப்போதே காத்திருக்கின்றனர்.