»   »  ஐ, புலி, தூங்காவனம்: தமிழ் புத்தாண்டு தினத்தில் டிவியில பாருங்க

ஐ, புலி, தூங்காவனம்: தமிழ் புத்தாண்டு தினத்தில் டிவியில பாருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதி தமிழ் தொலைக்காட்சிகளில் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. சன்டிவியில் விஜய் நடித்த புலி சிறப்புத் திரைப்படமாக ஒளிபரப்பாக உள்ளது.

ஜெயா டிவியில் விக்ரம் நடித்த ஐ திரைப்படமும், விஜய் டிவியில் கமல் ஹாசன் நடித்த தூங்கவனம் திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.


சினிமா மட்டுமல்லாமல் நட்சத்திரங்களின் பேட்டிகள், பட்டிமன்றங்கள், என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளது.


சன் டிவியில் 3 படங்கள்

சன் டிவியில் 3 படங்கள்

தமிழ் புத்தாண்டு தினத்தை பிறந்தநாள் தினமாக கொண்டாடுகிறது சன் டிவி எனவே விஷால் நடித்த ஆம்பள, அஜீத் நடித்த வீரம், விஜய் நடித்த புலி என எந்த ரசிகர்களும் கோபித்துக்கொள்ளாத அளவிற்கு 3 படங்களை ஒளிபரப்புகிறது.


சாலமன் பாப்பையா பட்டிமன்றம்

சாலமன் பாப்பையா பட்டிமன்றம்

சிறப்புத் திரைப்படங்களுடன் சாலமன் பாப்பையா தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் சுயநலமா பொதுநலமா என்று பேசப்போகிறார்கள்.


தூங்காவனம்

தூங்காவனம்

விஜய் டிவியில் கமல் ஹாசன் திரிஷா நடித்த தூங்காவனம் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. கூடவே சிக்கல்களை யார் துவக்கி வைக்கிறார்கள்? என்ற சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது.


கவுதம் மேனன்

கவுதம் மேனன்

புத்தாண்டு சிறப்பு காபி வித் டிடியில் இயக்குநர் கவுதம் மேனனுடன் உரையாடுகிறார் டிடி. என்னை நோக்கி பாயும் தோட்டா பற்றி பகிர்ந்து கொள்கிறார் கவுதம் மேனன்.


ராஜ் டிவி

ராஜ் டிவி

தமிழ் புத்தாண்டு தின சிறப்பு திரைப்படமாக ராஜ் டிவியில் அச்சாரம், எட்டுத்திக்கும் மதயானை திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
கூடவே மதுரை முத்து தலைமையில் காமெடி பட்டிமன்றம் நடைபெறுகிறது.


ரஜினி முருகன்

ரஜினி முருகன்

ஜீ தமிழ் டிவியில் சிவ கார்த்திக்கேயன் கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினிமுருகன் திரைப்படமும் தெறி, கோ 2 திரைப்படங்களின் சிறப்பு கண்ணோட்டமும் ஒளிபரப்பாகிறது.


மெகா டிவி

மெகா டிவி

எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்த டூரிங் டாக்கீஸ் திரைப்படம் மெகா டிவியில் ஏப்ரல் 14ம் தேதியன்று ஒளிபரப்பாகிறது. கூடவே நட்சத்திரங்களின் சிறப்பு பேட்டிகளும் ஒளிபரப்பாக உள்ளது.


மாயாபஜார்

மாயாபஜார்

சன் லைப் டிவியில் ஏப்ரல் 14ம் தேதி மாயாபஜார் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. அதே போல கேடிவியில் அட்டகத்தியும், ஒளிபரப்பாக உள்ளது. இந்த படங்களையும் மிஸ் பண்ணாம பாருங்க.


English summary
Tamil New Year (April 14) on Sun TV? It's Ilayathalapathy Vijay's fantasy-adventure film Puli.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil