»   »  சக்தி விருதுகள் 2015…. ஆச்சி மனோரமா அசத்தல்

சக்தி விருதுகள் 2015…. ஆச்சி மனோரமா அசத்தல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்த ஆச்சி மனோரமாவிற்கு 2015 ஆம் ஆண்டிற்கான சக்தி விருதுகளை வழங்கி கவுரப்படுத்தியுள்ளது புதிய தலைமுறை டிவி.

பல்வேறு துறைகளில் சாதனை படைத்துவரும் சான்றோர்களுக்கு ஆண்டுதோறும் தமிழன் விருதுகள் வழங்கி சிறப்பித்து வரும் நமது புதிய தலைமுறை இந்த ஆண்டுமுதல் பெண்களுக்கான "சக்திவிருதுகள்" வழங்க முடிவு செய்தது.

மகளிருக்கு சிறப்பு

மகளிருக்கு சிறப்பு

மகளிர் நாளில் நிகழ்ந்த இந்த அழகு மிகு விழாவில் சாதனை,புலமை, துணிவு,தலைமை, கருணை, திறமை ஆகிய பொருளில் சக்தி விருதுகள் வழங்கப்பட்டன. இதற்காக அமைக்கப்பட்ட நடுவர்களின் துணையோடு சாதனைப் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர்.

மனோரமா

மனோரமா

உடல்நலம் குறித்து பல வதந்திகள் கிளம்பினாலும் உற்சாக பெண்மணியாய் காட்சியளித்தார் ஆச்சி மனோரமா.

திலகவதி ஐ.பி.எஸ்

திலகவதி ஐ.பி.எஸ்

இந்த வண்ணமிகு விழாவில் திரைப்பட கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அவர்களுக்கு முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி திலகவதி பரிசுகளை வழங்கினார்.

புதிய தலைமுறை டிவியில்

புதிய தலைமுறை டிவியில்

பெண்களுக்கு ஒரு முன்னோடியாக திகழும் இந்த விருதாளர்களை புதிய தலைமுறையில் கண்டு ரசிக்கலாம். இந்நிகழ்ச்சி வரும் மார்ச் 22 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு ஒளிபரப்பாகும். இதன் மறு ஒளிபரப்பு இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாக உள்ளது.

English summary
Puthiya thalaimurai channel, which has been bestowing Tamizhan awards to the scholars of various fields, from this year on have decided to honour women by presenting the “shakthi awards” on international women’s day.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil