»   »  காதலா? கடமையா? பரபரப்புக்கு பஞ்சமில்லாத ரிப்போர்ட்டர்ஸ்

காதலா? கடமையா? பரபரப்புக்கு பஞ்சமில்லாத ரிப்போர்ட்டர்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பரபரப்பான சம்பவங்களுடன் காதலும் மோதலும் கலந்த ‘ரிப்போர்ட்டர்ஸ்' தொடர் புதுயுகம் தொலைக்காட்சியில் செப்டம்பர் 7ம் தேதி முதல் திங்கள் - வெள்ளி இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கொரியன் சீரியர்களை ஒளிபரப்பி வந்த புதுயுகம் டிவியில் இப்போது இந்தி சீரியல்களும் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பாகின்றன.

செய்தியாளர்கள் வாழ்வில் பரபரப்புக்கும் சுவாரஸ்யத்துக்கும் பஞ்சமே இருப்பதில்லை. நிருபர் தொழிலை லட்சியமாக ஏற்றுக்கொண்ட துணிச்சலான இளைஞர்களின் வாழ்க்கையில் நிகழும் முக்கிய திருப்பங்களை சொல்வதுதான் ‘ரிப்போர்ட்டர்ஸ்' தொடர்.

ரிப்போர்ட்டர்ஸ்

ரிப்போர்ட்டர்ஸ்

பிரபல பத்திரிகையில் நிருபராக பணிபுரியும் கபீரும் சேனலில் பணிபுரியும் ஆனந்தியும் ஒரு எக்ஸ்குளூசிவ் செய்தியை வெளியிடுவதற்காக போட்டி போடுகிறார்கள். முழுமையான ஆதாரம் இருந்தாலும் ஆனந்தியால் செய்தியை வரவழைக்க முடியாமல் போகிறது.

பறிபோகும் வேலை

பறிபோகும் வேலை

அந்த செய்தியை வெளியிடும் கபீருக்கு நல்ல பெயர் கிடைக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த செய்தியே அவன் வேலை பறிபோவதற்கும் காரணமாகிறது. அதன்பிறகு ஆனந்தி வேலை செய்யும் சேனலில் முக்கிய பொறுப்புக்கு வருகிறான் கபீர்.

காதலும் கடமையும்

காதலும் கடமையும்

கபீருடன் சேர்ந்து பணிபுரிய ஆனந்தி மிகவும் விருப்பமுடன் இருந்தாலும், இருவருக்கும் பல்வேறு விஷயங்களில் கடுமையான மோதல் நடக்கிறது. அதேநேரம் சேனல் அதிபரின் மகளுக்கு கபீர் மீது காதல் வருகிறது. சாதிக்கத்துடிக்கும் கபீர் காதலில் விழுந்தானா? அநியாயம் செய்பவர்களை தட்டிக்கேட்க முடிந்ததா? என்பதை நோக்கி 'ரிப்போர்ட்டர்ஸ்' தொடர் விறுவிறுப்பாக நகர்கிறது.

புதுயுகம் தொலைக்காட்சியில்

புதுயுகம் தொலைக்காட்சியில்

ரிப்போர்டர்ஸ் தொடரில் ராஜீவ் கண்டேல்வால், கிருத்திகா காம்ரா, மேகா சாட்டர்ஜி, புரு ஷிபர், ஆலம்கான், விக்ரம்ஜித் போன்ற பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். சமூக அக்கறையுடன் காதலும் மோதலும் நிறைந்த, ‘ரிப்போர்ட்டர்ஸ்' பரபரப்புத் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இதே தொடர் மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கும் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

English summary
A new TV Serial Reporters telecast on Puthuyugam TV weekdays on 7.30 P.M.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil