twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாவுக்கு போய் ஜெயிக்க முடியாத சின்னத்திரை நடிகைகள்

    By Mayura Akilan
    |

    சினிமாவில் மார்கெட் இழந்த நடிக்களை பலரும் சின்னத்திரைக்கு தொகுப்பாளராகவோ, சீரியலில் நடிக்கவோ வந்து விடுவார்கள். அதே சமயம் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி சினிமாவிற்கு நாயகிகளாகப் போனவர்கள் சிலர் உண்டு. அங்கு போன பின்னர்தான் சின்னத்திரை வேறு சினிமா வேறு என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். பிறகென்னா, சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்று கூறிவிட்டு போன வேகத்தில் பெவிலியனுக்கு திரும்பிவிடுவார்கள். அப்புறம் என்ன மறுபடியும் தொகுப்பாளராகவோ, சீரியலிலோ குப்பை கொட்ட வேண்டியதுதான். இதுபோன்று சின்னத்திரையில் சினிமாவிற்குச் சென்று போனவேகத்தில் திரும்பி வந்த நடிகைகள் யார் என்று தெரிந்து கொள்ள படியுங்கள்.

    இளமை புதுமை சொர்ணமால்யா

    இளமை புதுமை சொர்ணமால்யா

    சன் டிவி தொடங்கப்பட்ட புதிதில் கல்லூரி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் நிகழ்ச்சியான ‘இளமை புதுமை' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் சொர்ணமால்யா. அழகான தோற்றத்தோடு நடனமும் கை கொடுத்ததால் சீரியலில் வலம் வந்தார். அலைபாயுதே படத்தில் கதாநாயகி வாய்ப்பு என்று கூப்பிடவே ஆசையாய் போனவருக்கு ஏமாற்றம்தான். அக்கா நடிகையாகத்தான் அறிமுகம் கிடைத்தது. பின்னர் தங்கை, தோழி கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைக்கவே வெறுத்துப்போய் மீண்டும் சின்னத்திரையே கதி என்று சரணடைந்து விட்டார் சொர்ணமால்யா.

    கலக்கல் காயத்ரி ஜெயராம்

    கலக்கல் காயத்ரி ஜெயராம்

    உயரமான தோற்றம், அழகான உச்சரிப்பு என விஜய் டிவியில் தொகுப்பாளராக களம் இறங்கியவர் காயத்ரி ஜெயராம். விளம்பாரம், சினிமா வாய்ப்புகள் கதவை தட்டவே சின்னத்திரையை உதறிவிட்டு சினிமாவுக்குப் போனார். 'மஞ்சக்காட்டு' மைனாவாக நடித்தார். தாராளமாக நடித்தும் எதிர்பார்த்த வாய்ப்புகள் கதவை தட்டவில்லை. அப்புறம் என்ன திருமணம் செய்துகொண்டு மலேசியாவில் செட்டில் ஆனவர் இப்போது மீண்டும் சின்னத்திரையில் தொகுப்பாளராக வந்து போகிறார்.

    சரண்டரான சந்தோஷி

    சரண்டரான சந்தோஷி

    டிவி தொகுப்பாளராக சின்னத்திரைக்கு வந்தவர்தான் சந்தோஷி. அழகும் இளமையும் கைகொடுக்கவே ராதிகாவின் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் ராடான் நிறுவனம் தயாரித்த படத்தில் நாயகியாக அறிமுகமானர். ஒரு படத்தோடு அவ்வளவுதான். அப்புறம் கிடைத்ததெல்லாம் உப்புமா கம்பெனிகளில் சின்ன சின்ன கதாபாத்திரங்கள். வெறுத்துப்போன சந்தோஷி சின்னத்திரையில் அழுவதே மேல் என்று திரும்பிவிட்டார்.

    காணாமல் போன ஷர்மிலி

    காணாமல் போன ஷர்மிலி

    ஜெயா டிவியில் ‘காசுமேல' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் ஷர்மிலி. கையை, காலை ஆட்டிப்பேசியதில் நிகழ்ச்சி ஹிட் ஆகவே பிரபலமானார். இதனால் ‘ஆசை ஆசையாய்' படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக அறிமுகம் ஆனார் ஷர்மிலி. பின்னர் ஏவி.எம்புரொக்டஷன்ஸ் தயாரித்த ‘அன்பே அன்பே' படத்தில் ஷாமுக்கு ஜோடியாக நடித்தார். இரண்டு படங்களும் ப்ளாப் ஆகவே தமிழில் இருந்து மலையாளக்கரையோரம் ஒதுங்கினார். கடைசியில் அங்கும் கடைபோட முடியாமல் காணாமலே போய்விட்டார்.

    சினிமாவில் ஜெயிக்காத டிடி

    சினிமாவில் ஜெயிக்காத டிடி

    பிரபல தொகுப்பாளரின் தங்கை என்பதால் சின்னத்திரையில் எளிதாக என்ட்ரி கிடைத்தது திவ்யதர்ஷினிக்கு. கூடவே திறமையான பேச்சும் இருந்ததால் எளிதில் முன்னுக்கு வந்தார். இதே வேகத்தில் சினிமாவில் சில படங்களில் நடித்தால் திவ்யதர்ஷினி. எல்லாமே வந்து போகும் கதாபத்திரங்கள் என்பதால் சினிமாவுக்கு கும்பிடு போட்டுவிட்டு சின்னத்திரையே போதும் என்று முடிவெடுத்துவிட்டார் டிடி.

    மிரட்டும் எஸ். எஸ். மியூசிக் பூஜா

    மிரட்டும் எஸ். எஸ். மியூசிக் பூஜா

    இசை டிவியில் இளமையான தொகுப்பாளராக அறிமுகம் ஆனவர் பூஜா. சினிமா வாய்ப்புகள் கதவை தட்டவே இரண்டொரு படங்களில் தலைகாட்டினார். ஆனாலும் என்ன காரணமோ தெரியவில்லை அவரால் அங்கே ஜொலிக்க முடியவில்லை. சைலண்டாக சின்னத்திரை சீரியலில் களம் இறங்கிவிட்டார்.

    லேட் ஆன லேகா வாஷிங்டன்

    லேட் ஆன லேகா வாஷிங்டன்

    டிவி தொகுப்பாளியாக இருந்த லேகா வாஷிங்டன் 'ஜெயம் கொண்டான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் தலையை காட்டியிருக்கும் இவருக்கு சொல்லும்படியான பட வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை. இதனால் விளம்பர உலகில் செட்டிலாகிவிட்டார்.

    நீடிக்க முடியாத நீபா

    நீடிக்க முடியாத நீபா

    திரை உலக தம்பதிகள் வாமன் - மாலினியின் மகளான நீபா அறிமுகமானது என்னவோ சினிமாவில்தான். ஆனால் என்ன காரணத்தாலே அவரால் சினிமாவில் நீடிக்கமுடியவில்லை. கதாநாயகியாக மட்டுமல்ல எதுவென்றாலும் ஒகே என்று களம் இறங்கியும் அவரால் சினிமாவில் ஜெயிக்க முடியவில்லை. கடைசியில் சின்னத்திரையில் கரை ஒதுங்கிவிட்டார்.

    English summary
    Some small screen actresses who are like Queens in TV serials and other programmes have miserably failed to score in Cinema. Here is a round up.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X