விரைவில் எண்ட்கார்ட் போடவுள்ள ரச்சிதாவின் சீரியல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை : சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர்.
சரவணன் மீனாட்சி தொடரை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 தொடரில் நடித்துவந்த இவர் திடீரென அந்த தொடரில் இருந்து விலகினார்.
தொடர்ந்து கலர்ஸ் தமிழின் இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் தற்போது நடித்து வருகிறார். இதில் 2 குழந்தைகளின் அம்மாவாக அவர் நடித்து வருகிறார்.

நடிகை ரச்சிதா மகாலட்சுமி
நடிகை ரச்சிதா மகாலட்சுமி, சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர். இவரது பெயருடன் ரச்சிதா மீனாட்சி என்று சேர்த்து ரசிகர்கள் அழைக்கும் அளவிற்கு இந்த தொடர் அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது. இந்த தொடரில் ஹீரோவிற்கும் ரச்சிதாவிற்கும் இடையிலான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்தது.

புகழை கொடுத்த சரவணன் மீனாட்சி தொடர்
இந்தத் தொடரை தொடர்ந்து அடுத்தடுத்த தொடர்களில் நடித்துவந்த ரச்சிதா விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் 2 தொடரில் நடித்துவந்தார். இந்தத் தொடரும் அவருக்கு சிறப்பாக அமைந்த நிலையில் திடீரென தொடரிலிருந்து விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

இது சொல்ல மறந்த கதை சீரியல்
இதையடுத்து கலர்ஸ் தமிழில் இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்து வருகிறார். கடந்த மார்ச் மாதத்தில்தான் இந்தத் தொடர் துவங்கியது. இதில் 2 குழந்தைகளின் அம்மாவாக நடித்து வருகிறார் ரச்சிதா. கணவனை இழந்து நீதிக்காக போராடும் பெண்ணாக இந்தத் தொடரில் அவர் நடித்து வருகிறார்.

வரவேற்பை பெற்ற சாதனா கேரக்டர்
சாதனா என்ற கேரக்டரில் ரச்சிதாவின் கேரக்டர் இந்தத் தொடரில் ரசிகர்களின் அதிகமான வரவேற்பையும் கவனத்தையும் பெற்று வருகிறது. இந்தத் தொடரில் சத்யா புகழ் விஷ்ணு நாயகனாக நடித்து வருகிறார். ரசிகர்கள் தொடர்ந்து இந்த சீரியலை விரும்பிப் பார்க்கத் துவங்கியுள்ளனர்.

நீதிக்கான சாதனா போராட்டம்
நீதிக்கான சாதனாவின் போராட்டத்திற்கு அர்ஜூன் என்ற கேரக்டரில் விஷ்ணுவின் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீரியல் முடிவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சீரியலுக்கான ப்ரமோவில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இந்தத் தொடர் துவங்கிய நிலையில் இன்னும் ஒரு ஆண்டுகூட நிறைவடையாமல் சீரியலை முடிக்க வேண்டிய காரணம் என்ன என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

விரைவில் நிறைவடையும் சீரியல்
இந்த ப்ரமோவில் இறுதிக் கட்டத்தை நோக்கி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சீரியலை முடிக்க வேண்டாம் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். கலர்ஸ் தமிழ் சேனல் டிஆர்பியை அதிகரிக்கும் வகையில் அடுத்தடுத்த புதிய தொடர்களை களமிறக்கி வருகிறது. பழைய மற்றும் சரியான வரவேற்பை பெறாத தொடர்களை முடித்து வருகிறது.

ரசிகர்கள் குழப்பம்
ஆனால் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள இது சொல்ல மறந்த கதை சீரியலை நிறைவுக்கு கொண்டு வரவேண்டிய அவசியம் என்ன என்பதே ரசிகர்களின் கேள்வி. ரச்சிதா சொந்த வாழ்க்கையில் அதிகமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். அவரது கணவரை விவாகரத்து செய்யும் முடிவிலும் உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











