For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  சன் டிவியில் செல்லமே அவுட்… வாணி ராணி இன்

  By Mayura Akilan
  |

  சன் டிவியில் ராதிகா நடிப்பில் ஒளிபரப்பாகும் செல்லமே தொடர் ஒருவழியாக முடிவுக்கு வரப்போகிறது. அதற்கு பதிலாக ஒளிபரப்பாகும் புதிய தொடரில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் ராதிகா.

  சன் டிவியில் மிகநீண்டகாலமாக ஒரே நேரத்தில் இரவு 9.30 மணிக்கு நெடுந்தொடர்களை ஒளிபரப்பிவருகிறது ராதிகாவின் ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம். இதற்காக அந்த நிறுவனம் சார்பில் சன் குடும்ப விருதினையும் பெற்றுள்ளார் ராதிகா.

  சித்தி தொடரின் மூலம் சின்னத்திரை ரசிகர்களைக் கவர்ந்த ராதிகா 12 ஆண்டுகளுக்கும் மேலாக நெடுந்தொடரில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார். சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே தொடரைத் தொடர்ந்து வாணி ராணியாக ரசிகர்களை சந்திக்க வருகிறார் ராதிகா.

  சித்தியில் தொடங்கிய பயணம்

  சித்தியில் தொடங்கிய பயணம்

  சித்தி தொடரில் காவல்துறை அதிகாரியாகவும், பொறுப்பான குடும்ப பெண்ணாகவும் ராதிகா இரட்டை வேடத்தில் நடித்தார். சன் டிவியில் மிக நீண்டகாலம் ஒளிபரப்பான தொடர் என்ற பெயரை பெற்றது. இதில் கதாநாயகனாக நடிகர் சிவக்குமார் நடித்திருந்தார். சி.ஜே.பாஸ்கர் இயக்கியதொடர் இது. ராதிகாவோடு சி.ஜே.பாஸ்கரும் புகழ் பெற்றார்.

  அண்ணாமலையில் அசரவைத்தார்

  அண்ணாமலையில் அசரவைத்தார்

  சித்தி தொடரின் கதாபாத்திரத்திற்கு நேர் எதிர் பாத்திரமாக அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் தொடராக அண்ணாமலை அமைந்திருந்திருந்தது. இதில் மந்திரம், சூனியம், சித்தர் என்றெல்லாம் ஒருவழியாக மக்களை குழப்பி எடுத்தார் ராதிகா. இதுவும் சி.ஜே. பாஸ்கர் இயக்கிய தொடர்தான். திடீரென்று அவரை தூக்கிவிட்டு சுந்தர். கே. விஜயனை இயக்குநராக மாற்றினார் ராதிகா.

  செல்வியில் இலங்கைப் பெண்

  செல்வியில் இலங்கைப் பெண்

  இலங்கையில் இருந்து தமிழகம் வரும் பெண்ணாக செல்வியில் நடித்திருந்தார் ராதிகா. இதில் ராதிகாவின் தோழியாக நடிகை சரிதா நடித்தார். நன்றாக போன கதை, சுனாமியாக சுழற்றியடித்தது. பின்னர் அரைகுறையாக முடிந்து போனது. இந்த தொடரில் ராதிகாவின் ஜோடியாக வேணு அரவிந்த் நடித்திருந்தார்.

  செல்வியின் தொடர்ச்சி அரசி

  செல்வியின் தொடர்ச்சி அரசி

  செல்வி தொடரை பாதியிலேயே முடித்துவிட்டதாக நினைத்த ராதிகா அதே கதாபாத்திரங்களை வைத்து அரசி தொடரை எடுத்தார். இதில் ராதிகாவின் அம்மாவாக காவல்துறை உயரதிகாரியாக ராதிகாவே நடித்தார். இதில் வேணு அரவிந்த், சிவசந்திரன் ஆகியோர் இரட்டையர் ராதிகாவிற்கு ஜோடியாக நடித்திருந்தனர். இந்த தொடரை இயக்குநர் சமுத்திரகனி இயக்கியிருந்தார்.

  செல்லம்மாவாக செல்லமே

  செல்லம்மாவாக செல்லமே

  ராதிகாவின் எல்லா தொடர்களையும் விட சுத்தி சுத்தி குழப்பியடித்த தொடர் என்றால் அது செல்லமே என்றுதான் கூறவேண்டும். கூட்டு குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடரை எப்படி கொண்டு போவது என்று தெரியாமல் கடைசியில் எல்லோருக்குமே இரண்டு மனைவிகளாக்கிவிட்டார். எப்படியோ 845 எபிசோடுகளை கடந்து கிளைமேக்ஸ் காட்சியை எட்டிவிட்டது.

  அடுத்து வருது வாணி ராணி

  அடுத்து வருது வாணி ராணி

  ராடனின் அடுத்த மெகா, ‘வாணி ராணி' என்று முன்னோட்டம் போடுகின்றனர். வரும் 18ம் தேதியோடு செல்லமே முடிந்து வாணி ராணி தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம். திமிரான தோற்றம் கொண்ட பணக்கார பெண்ணாக ஒரு ராதிகாவும், அடக்க ஒடுக்கமான வேலைக்காரப் பெண்ணாக ஒரு ராதிகாவும் இந்த தொடரில் வருகின்றனர். இதில் வேணு அரவிந்த், பப்லு, சுப்பு பஞ்சு அருணாசலம் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த தொடரையாவது குழப்பாமல் கொண்டு செல்வாரா ராதிகா பொறுத்திருந்து பார்ப்போம்.

  English summary
  RADAAN MEDIAWORKS launching a new serial title “Vani Rani ” starring Radhika,venu aravind,babloo pritiviraj and subbhu panchu subramaniam as the main lead.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more