Don't Miss!
- Sports
எங்கள் இனிய நாளை கெடுத்து விடாதீர்கள்.. மன வேதனையாக இருக்கு.. திருமணமான முதல் நாளே ஆப்ரிடி டிவிட்
- News
டெல்லி விமான நிலையத்தில் கேன்சர் பாதித்த பெண் பயணியை இறக்கிவிட்ட அமெரிக்க விமானம்.. காரணம் என்ன?
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ராதிகா எடுக்கும் அதிரடி முடிவு...பாக்யலட்சுமியில் அடுத்து நடக்க போகும் ட்விஸ்ட் இது தான்
சென்னை : பாக்யலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பது தான் தமிழ் டிவி சீரியல் ரசிகர்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பாக உள்ளது. சீரியல் முடிய போகிறதா என்ற கேள்வியையும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
விஜய் டிவி.,யில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியல் தான் இன்றைய தேதியில் அதிகமானவர்களால் பார்க்கப்படும் சீரியலாக உள்ளது. டிஆர்பி.,யில் முதலிடத்தில் இருப்பதும் இந்த சீரியல் தான். இந்த சீரியலின் லீட் ரோல் பாக்யலட்சுமியாக இருந்தாலும், கோபி ரோலில் நடிக்கும் சதீஷ் தான் பலரின் ஃபேவரைட். இவருக்காகவே இந்த சீரிலை பார்ப்பவர்கள் தான் அதிகம்.
ராதிகாவை சந்திக்கும் பாக்யா...பாக்யலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்க போகிறது ?

உண்மையை உளறும் கோபி
அதிரடி திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் பாக்யலட்சுமி சீரியலில், மூர்த்தி-தனம் சொன்ன தகவலால், கோபியிடம் அவரின் குடும்பத்தை பார்க்க வேண்டும் என அடம்பிடிக்கிறார் ராதிகா. முடியாது என சண்டை போடும் கோபியை ராதிகா வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். வருத்தத்தில் குடித்து விட்டு ராதிகாவின் வீட்டிற்கு வரும் கோபி, பாக்யா தான் தனது மனைவி என்ற உண்மையை உளறுகிறார். இதனால் ஆத்திரமடையும் ராதிகா, கோபியை வீட்டை விட்டு வெளியே தள்ளுகிறார்.

பாக்யாவிடம் வசமாக சிக்கும் கோபி
குடி போதையில் தனது வீட்டிற்கு வரும் கோபி, தூக்கத்தில் ராதிகா பற்றி மறைமுகமாக உளறுகிறார். இதனால் பாக்யாவின் சந்தேகம் அதிகரிக்கிறது. இரவில் போதையில் நடந்தது ஏதும் நினைவில் இல்லாததால் என்ன நடந்தது என புரியாமல் தவிக்கிறார். ராதிகாவின் வீட்டிற்கு செல்லும் கோபியிடம், அவர் கோபமாக பேசுகிறார். போதையில் உளறியதை நினைவுபடுத்துகிறார். இதனால் அதிர்ச்சி அடைகிறார் கோபி. இப்படி செம த்ரில்லிங்காக சென்று கொண்டிருக்கிறது.

ராதிகாவை சந்திக்கும் பாக்யா
இந்நிலையில் புதிய ப்ரோமோவாக ராதிகாவின் வீட்டிற்கு சென்று பாக்யாவை சந்திப்பது போன்ற போட்டோ வெளியோகி உள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்க போகிறது, எதற்காக இவர்கள் சந்திக்கிறார்கள், ராதிகா, கோபி பற்றிய உண்மையை பாக்யாவிடம் சொல்வாரா என்ற கேள்வி எழுகிறது. இந்த சமயத்தில் லேட்டஸ்ட் தகவலாக, ராதிகா வீட்டிற்கு வரும் பாக்யா, தனது கணவரின் நடவடிக்கை பற்றி வருத்தமாக பேசி புலம்புகிறார். இதனால் மனமுடைந்த ராதிகா, பாக்யாவிற்காக கோபியை விட்டு தர முடிவு செய்கிறார்.

என்ன செய்ய போகிறார் கோபி
இதனால் பாக்யா, ராதிகாவை தாண்டி இனி கதை முழுவதும் கோபியை நோக்கி திரும்ப உள்ளது. கோபி அடுத்து என்ன போகிறார். கோபியை பிரிய ராதிகா எடுக்கும் அதிரடி முடிவால் கோபி இனி என்ன செய்ய போகிறார் என்பது தான் இனி வரும் எபிசோட்களில் காட்டப்பட உள்ளது.