»   »  சன்டிவியில் வாணி ராணி 1000... ராதிகாவை வாழ்த்தும் ரசிகர்கள்

சன்டிவியில் வாணி ராணி 1000... ராதிகாவை வாழ்த்தும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் வாணி ராணி சீரியல் 1000வது எபிசோடை எட்டியுள்ளது. இதனை சின்னத்திரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். பல ரசிகர்கள் விமர்சனம் செய்தும் பதிவிட்டு வருகின்றனர். இந்த தொடரின் நாயகியான ராதிகாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

தொடரின் நாயகியும்,தயாரிப்பாளருமான ராதிகா டிவிட்டரில் தெரிவித்ததும்,வாணி ராணி ரசிகர்கள் தொடர்ந்து தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதிரடியான அக்கா,அப்பாவியான தங்கை என இருவேறு வேடங்களில் ராதிகா நடித்து வரும் வாணி,ராணி தொலைக்காட்சி தொடர் தாய்குலங்கள் மத்தியில் மிகப்பிரபலம்.

சென்டிமென்ட் ,காமெடி,அதிரடி என விறுவிறுப்பாக செல்லக்கூடிய இந்த தொடரின் 1000வது எபிசோட் நேற்று ஒளிபரப்பானது. ஆயிரமாவது எபிசோட் என்றால் ஏதாவது புதுமை செய்திருப்பார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சற்றே ஏமாற்றம்தான் மிஞ்சியது.

ராதிகா டுவீட்

ரசிகர்களின் வாழ்த்துச் செய்திகளை ராதிகாவும் அசராமல் அதை தனது டுவிட்டர் பக்கத்தில் ரீ டுவிட் செய்து வருகிறார். வாழ்த்தும் ரசிகர்களுக்கு நன்றி கூறி வருகிறார் ராதிகா.

2013ல் தொடங்கிய வாணி ராணி

2013ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கிய வாணி ராணி 1000 எபிசோடை எட்டியுள்ளது. வாணி ராணியில் ராதிகாவுடன் வேணு அரவிந்த், பிருத்விராஜ், ரவிகுமார், சாந்தி வில்லியம்ஸ், நீலிமா ராணி உள்பட பலர் நடித்து வருகிறார்கள். ஹரி பின்னணி இசை அமைக்கிறார். 1000மாவது எபிசோட் நேற்று ஒளிபரப்பானது.முதல் பகுதியை ரத்னம் இயக்கினார். அடுத்த பகுதியை வி.சி.ரவி இயக்கினார், தற்போது ஆர்.ராமச்சந்திரன் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

குடும்பத்திற்குள் மோதல்

குடும்பத்திற்குள் மோதல்

சாமிநாதன்-ராணி தம்பதியினர் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். வாணிக்கும், தாதா ஜீ.பிக்கும் மோதல் முற்றுகிறது. வாணி குடும்பத்திற்கும், ராணி குடும்பத்திற்கும் மீண்டும் மோதல் உருவாகிறது. பூங்கொடி வீட்டில் பிரச்சினை வேறு ரூபமாக இருக்கிறது. மாமனாரிடம் சவால் விடுகிறாள் பூங்கொடி.

புதுமுகம் அறிமுகம்

புதுமுகம் அறிமுகம்

சரவணன் வேலைக்குப் போகும் மகிழ்ச்சியில் கோவிலுக்கு வந்து அபிசேகம் செய்கிறாள் ராணி. தேனுவும் உடன் வர நீண்ட நாட்களுக்குப் பின்னர் முகம் முழுக்க சிரிப்பு ராணி முகத்தில். கோவிலில் அழும் குழந்தை ஒன்றை சமாதானம் செய்யும் இளம் பெண்ணைப் பார்த்து ராணியின் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி பரவுகிறது.

1000மாவது எபிசோடை தாண்டியும் பரபரப்புடன் நகர்கிறது ‘வாணி ராணி'யின் கதை.

English summary
Radhika's Vani Rani tv Serial 1000th episode telecast on Sun TV on July 11.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil