Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பல எதிர்மறை எண்ணங்கள் மனதில் வரலாம்...
- News
இது மோசடி! ஏமாறாதீங்க.. மின் இணைப்பு தொடர்பான மெசெஜ் பற்றி சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் அட்வைஸ்!
- Sports
தினேஷ் கார்த்திக்கிற்கு பிசிசிஐ துரோகம்.. நம்ப வைத்து ஏமாற்றம்.. மீண்டு வருவாரா DK
- Finance
இனி உங்க இஷ்டத்துக்கு வீடியோ போட முடியாது.. சமூக வலைத்தள வீடியோவுக்கு கடிவாளம்!
- Automobiles
ஹூண்டாயிடம் கவரவத்தை பறி கொடுத்த டாடா.... என்னங்க இப்படி ஆகிபோச்சு
- Technology
இனி 6 மட்டும் "இல்ல" அனைத்தும் உங்களுக்கு தான்: வாட்ஸ்அப் புது அம்சம்
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
பொன்னியின் வீட்டில் கல்லெறியும் எதிரிகள்... ஆதரவாக களமிறங்கும் வாணி -ராணி... ராதிகாவின் புதிய தொடர்!
சென்னை : நடிகை ராதிகா சரத்குமாரின் சித்தி தொடர் சன் டிவியில் அவருக்கு சிறப்பான ஏற்றத்தை கொடுத்தது.
தொடர்ந்து அவரது செல்லமே, வாணி ராணி உள்ளிட்ட தொடர்கள் அவரை சன் டிவியின் மிகவும் முக்கியமான நாயகியாக உயர்த்தியது.
தற்போது சன் டிவியில் அவரது சித்தி 2 தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்று வருகிறது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் அந்த தொடரில் நடிக்காமல் உள்ளார்.
கலைஞர்
டிவிக்கு
தாவிய
ராதிகா...
விரைவில்
முடிகிறதா
சன்
டிவியின்
சித்தி
2
சீரியல்?

நடிகை ராதிகா
நடிகை ராதிகா தமிழ் சினிமாவின் முக்கியமான மற்றும் முன்னணி நாயகியாக இருந்தவர். கமல், ரஜினி, விஜய்காந்த், சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்தவர். மிகவும் பிசியாக காணப்பட்டவர். வெள்ளந்தியான நடிப்பிற்கும் இவர் சிறப்பாக பொருந்துவார். அதேபோல போல்டான கேரக்டருக்கும் இவரை போல பொருத்தமான நடிகைகள் அமைவது கடினம்.

சின்னத்திரையில் ராதிகா
ஒரு கட்டத்தில் சினிமாவில் கேரக்டர் ரோல்களில் நடித்துவந்த அவர், சின்னத்திரையிலும் கவனம் செலுத்தினார். சித்தி தொடர் மூலம் சன் டிவியில் கால்பதித்த ராதிகா, அந்தத் தொடரின்மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டார். தொடர்ந்து அண்ணாமலை, செல்வி, வாணி ராணி என இவரது பயணம் தொடர்ந்தது.

சித்தி 2 தொடர்
இன்றளவும் இவரது சீரியல்களுக்கு ரசிகர்களின் வரவேற்பு உள்ளது என்பதை சமீபத்தில் கொரோனா காலத்தில் வெளியான சித்தி தொடர் உணர்த்தியது. தொடர்ந்து சித்தி 2 தொடரையும் கடந்த 2020ல் துவங்கிய ராதிகா, அதை தயாரித்தும் வருகிறார். சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த தொடரில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு விலகினார்.

சித்தி 2 நிறைவு?
ஆனாலும் விறுவிறுப்பான எபிசோட்களுடன் இந்த தொடர் சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆனாலும் 500 எபிசோட்களை தாண்டிய இந்தத் தொடர் விரைவில் முடிவடைய உள்ளதாகவும், இதன் க்ளைமாக்ஸ் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இன்னும் வெளியாகவில்லை.

சிறப்பான வாணி ராணி
கடந்த 2013ல் துவங்கப்பட்ட வாணி ராணி தொடர் சிறப்பான வரவேற்புடன் தொடர்ந்து சன் டிவியில் 6 ஆண்டுகள் ஒளிபரப்பானது. தற்போது இந்த தொடர் கலைஞர் டிவியில் மறுஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மிகச்சிறந்த வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

பொன்னி c/o ராணி தொடர்
இதையடுத்து தற்போது கலைஞர் டிவியின் ராதிகாவின் புதிய தொடர் ஒன்று அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்னி c/o ராணி என்ற இந்தத் தொடரின் ப்ரமோக்கள் வெளியாகியுள்ளது. இந்தத் தொடரில் பொன்னி கேரக்டரில் ப்ரீத்தி சஞ்சீவ் நடிக்கவுள்ளார்.

பொன்னியின் பிரச்சினை
ராணியின் தோழியாக இந்தத் தொடரில் ப்ரீத்தி நடிக்கிறார். அழகான கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்துவரும் அவரது குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினையை வாணியும் ராணியும் சேர்ந்து எப்படி தீர்க்கிறார்கள் என்பதாக கதை எடுக்கப்பட்டுள்ளது. வாணி ராணி தொடரின் தொடர்ச்சியாக இந்தத் தொடர் இருக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புதிய தொடரின் ப்ரமோக்கள்
இதனிடையே இந்தத் தொடரின் ப்ரமோக்களில் நடிகை ராதிகா, தொடர் குறித்த பகிர்வுகளை செய்துள்ளார். வாணியாகவும், ராணியாகவும் இரண்டு ப்ரமோக்களில் அவர் தொடர் குறித்து பேசியுள்ளார். அடுத்த மாதம் ஒளிப்பரப்பாக உள்ள இந்த தொடர் எந்த தேதியிலிருந்து ஒளிபரப்பாகும் என்பது குறித்து விரைவில் தெரியவரும்.

பிரச்சினையை தீர்க்கும் வாணி -ராணி
வாணி ராணி தொடர் பல்வேறு திருப்பங்களுடன் ராதிகாவின் இரண்டு வித்தியாசமான பரிணாமங்களை வெளிப்படுத்தியது. தொடர்ந்து 6 வருடங்கள் ரசிகர்களை கட்டிப் போட்டது. தற்போது அந்த வேலையை கலைஞர் டிவியிலும் செய்து வருகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து பொன்னியின் பிரச்சினைகளை எப்படி தீர்க்கப் போகிறார்கள் என்று பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.