»   »  ஜப்பானில் கெத்து காட்டி போலீசில் சிக்கிய ராஜா ராணி 'செம்பா'

ஜப்பானில் கெத்து காட்டி போலீசில் சிக்கிய ராஜா ராணி 'செம்பா'

Posted By:
Subscribe to Oneindia Tamil
இந்தியாவிலிருந்து சென்று ஜப்பான் போலீசாரிடம் மாற்றிகொண்ட செம்பா..!!

சென்னை: ராஜா ராணி தொலைக்காட்சி தொடரில் செம்பாவாக நடிக்கும் ஆல்யா மானசா ஜப்பான் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.

ராஜா ராணி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. அந்த தொடரில் அவர் அப்பாவி பெண் செம்பாவாக நடித்து வருகிறார்.

செம்பாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

செம்பா

செம்பா

ராஜா ராணி தொலைக்காட்சி தொடரில் அநியாயத்திற்கு அப்பாவியாக நடித்துள்ளார் ஆல்யா மானசா. இப்படி இருக்காதம்மா, பதிலுக்கு திருப்பிக் கொடு என்று ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு அப்பாவியாக நடிக்கிறார்.

தேர்வு

தேர்வு

ஆல்யாவின் முகத்தில் அப்பாவித்தனம் தெரிந்ததால் அவரை அந்த கதாபாத்திரத்தில் நடிக்குமாறு அழைத்தார்களாம். என் முகத்தில் அப்பாவித்தனம் தெரிகிறதா என்று ஆல்யாவுக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சாம்.

ஆல்யா

ஆல்யா

ராஜா ராணியில் அவ்வளவு அப்பாவியாக இருக்கும் செம்பா நிஜத்தில் தலைக்கனம் இல்லாமல் படபடவென பேசும் மாடர்ன் பெண். மனதில் பட்டதை பேசுகிறார்.

போலீஸ்

போலீஸ்

நான் ஜப்பான் மொழி கற்றுள்ளேன். ஜப்பான் சென்றபோது போலீசாரிடம் மாட்டிக் கொண்டேன். அங்கு சைக்கிளில் டபுள்ஸ் போகக் கூடாது. நான் கெத்தாக சீன தோழியுடன் டபுள்ஸ் போனேன். அப்படி போனபோது போலீசார் வழிமறுத்து பாஸ்போர்ட்டை கேட்டார்கள். பின்னர் பாவப்பட்டு எச்சரித்துவிட்டனர் என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் ஆல்யா மானசா.

English summary
Raja Rani television serial fame Semba said in an interview that she was caught by police in Japan when she was riding a bicycle with a pillion. The police warned her as pillion is not allowed in bicycle there.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X