For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஆ.. ஊ... வியர்க்க விறுவிறுக்க.. இதுக்கு பேரு என்ன தெரியுமா.. அசர வைத்த ரம்யா!

  |

  சென்னை : ஆ.. ஊ என்று சத்தமிட்டபடி ரம்யா செய்த உடற்பயிற்சியைப் பார்த்து இப்போது பலரும் அதை பாலோ பண்ண ஆரம்பிச்சிருக்காங்களாம்.

  முதலில் சத்தத்தை கேட்டதும் என்னவோ ஏதோ என்று பதறிப் போன ரசிகர்கள் வீடியோவை பிளே பண்ணி பார்த்த பிறகுதான் இது உடற்பயிற்சியா என்று நம்பியிருக்கின்றனர்.

  இந்த மாதிரி செய்ததால் தான் என்னோட மசில்ஸ் காணாம போச்சு என்று வேர்த்து விறுவிறுக்க ஜிம் உடையில் சிலிர்க்க வைத்திருக்கிறார்.

  என்னாது... யாரடி நீ மோகினி சீரியல் முடியப் போகிறதா .. பரபரப்பில் ரசிகர்கள்! என்னாது... யாரடி நீ மோகினி சீரியல் முடியப் போகிறதா .. பரபரப்பில் ரசிகர்கள்!

  சூப்பர் தொகுப்பாளினி

  சூப்பர் தொகுப்பாளினி

  டிவி நிகழ்ச்சிகளை பொருத்தவரையில் புதுசு புதுசாக தொகுப்பாளர்கள் அறிமுகமாகி கொண்டு இருக்கின்றனர் .ஆனால் எத்தனை பேர் வந்தாலும் அவர்களில் டக்கென ரசிகர்களின் மனதில் நினைவுக்கு வருவது ரம்யா சுப்பிரமணியன் தான். இவர் 2004ஆம் ஆண்டில் மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்றிருக்கிறார். மாடலிங்கில் கவனத்தை செலுத்தலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் இவருக்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் வாய்ப்பு கிடைத்தது

  கேடி பாய்ஸ் கில்லாடி பெண்கள்

  கேடி பாய்ஸ் கில்லாடி பெண்கள்

  அதில் இவருக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகுதான் இவர் கலக்கப்போவது யாரு ,உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது .இவர் தொகுப்பாளராக காலடி எடுத்து வைத்த பிறகு இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லடி பெண்கள் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

  மாஸ்டரில் தலை காட்டல்

  மாஸ்டரில் தலை காட்டல்

  இவர் தொகுப்பாளராக மட்டுமல்லாமல் நடிகையாகவும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மங்காத்தா ,ஓ காதல் கண்மணி ,மாசி என்கிற மாசிலாமணி, வனமகன், குரு ,சங்கத் தலைவன் போன்ற பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போதும் கூட நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இவர் நடிகையாகவும் தொகுப்பாளராகவும் மட்டுமல்லாமல் ஒரு உடற்பயிற்சி வல்லுநராகவும் இருந்துவருகிறார்.

  ஜிம் பாடி

  ஜிம் பாடி

  உடற்பயிற்சிகளை செய்வதில் இவருக்கு நிகர் இவர்தான். இவருடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட மன கஷ்டங்களை தீர்ப்பதற்காக உடற்பயிற்சியினை ஆரம்பத்தில் ஏதோ ஒரு கடமைக்கு செய்திருக்கிறார் .ஆனால் நாட்கள் செல்ல செல்ல அதில் முழு ஈடுபாடு வந்தது மட்டும் இல்லாமல் தற்போது வெறியாக மாறி விட்டதாம் .அதனால்தான் புசுபுசுவென இருந்த இவர் தற்போது சிக்கென மாறி இளம் கதாநாயகிகளுக்கு டப் கொடுத்து வருகிறார்.

  நல்லா ஸ்லிம் ஆயிட்டாரே

  நல்லா ஸ்லிம் ஆயிட்டாரே

  இவருடைய உடற்பயிற்சியை பார்த்து பல பெண்களும் இவரை பின் தொடர ஆரம்பித்து விட்டனர் . தற்போது இருக்கும் சூழ்நிலையில் பலருக்கும் உடலில் அதிகமான நோய்களும் பிரச்சினைகளும் இருந்து வருகிறது. அதனை போக்குவதற்காக பலர் ஒர்க்அவுட் சென்டர்களை தேடி வருகின்றனர். இந்த நிலையில் இவர் எளிமையாக செய்து சொல்லிக் கொடுக்கும் வீடியோக்களை பார்த்ததும் பலர் இவரை ஃபாலோ பண்ணி வருகின்றனர்.

  Ramya Pandian அட்டகாசமான Photoshoot | அழகின் ரகசியம் இதுதானா?
  இதுக்குப் பேருதான் சிஸ்ஸி ஸ்குவாட்ஸ்

  இதுக்குப் பேருதான் சிஸ்ஸி ஸ்குவாட்ஸ்

  தற்போது லேட்டஸ்டாக சிஸ்ஸி ஸ்குவாட்ஸ் என்னும் உடற்பயிற்சியை செய்து வருகிறார் அதில் சாட்ஸ், டீ சர்ட் போட்டுக்கொண்டு வேர்த்து விறுவிறுக்க இவர் உட்கார்ந்து எந்திரித்து உடற்பயிற்சி செய்யும் அழகை பார்த்து ரசிகர்கள் மீண்டும் மீண்டும் ரசித்து வருகின்றனர் .அதுவும் வேர்த்து விறுவிறுக்க மூச்சை இழுத்து விட்டபடி இவர் சத்தம் விடுவதை பார்த்ததும் நெட்டிசன்கள் கலாய்த்தாலும் இந்த வீடியோவை பார்க்கும் அவருடைய ரசிகர்கள் மேலும் இந்த மாதிரி வீடியோக்களை தொடர்ந்து பதிவிடுங்கள் என இவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

  English summary
  TV compere Ramya Subramaniyam is doing Sissy squats in the Gym.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X