»   »  மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் "ரம்யா" குருவி!

மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் "ரம்யா" குருவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆண்டாள் அழகரில் மாமன் மகனுடன் எதிர்பாராமல் நடந்த திருமணம்... இதனால் ஏற்பட்ட கோபம்.... மண வாழ்க்கையில் நுழைந்தாலும் தனது ஆசையான கலெக்டர் படிப்பை விடாமல் தொடரும் தைரியசாலி என மிளிர்கிறார் ரம்யா.

விஜய் டிவியின் மதுரை சீரியலில் கவனம் ஈர்த்த ரம்யா, 'சரவணன் மீனாட்சி 1 தொடரிலும் அமைதியான நடிப்பினால் அசத்தினார். சன் டிவியின் முத்தாரம் சீரியலில் நடித்து இல்லத்தரசிகளின் உள்ளங்களைக் கவர்ந்த ரம்யா தற்போது ஆண்டாள் அழகர் தொடரில் கிராமத்து பெண்ணாக நடித்து வருகிறார்.

சீரியலில்தான் கிராமத்து வேடங்கள் ஆனால் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். பி.ஏ. படித்து விட்டு மாடலிங் செய்து கொண்டிருந்தவருக்கு "காதல் கதை' சீரியல் வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து நிம்மதி, கௌரவம் என பல சீரியல்களில் நடித்த ரம்யாவை அடையாளம் காட்டியது மதுரை சீரியலில் தண்டல் தாமரை கதாபாத்திரம்தான். தொடர்ந்து சரவணன் மீனாட்சியில் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி நடித்திருந்தார்.

ஸ்டாலினுடன் ஜோடி

ஸ்டாலினுடன் ஜோடி

சரவணன் மீனாட்சியில் ஜோடியாக நடித்த ஸ்டாலின்தான் ஆண்டாள் அழகரிலும் முறைப்பையனாக நடித்துள்ளார். இந்த ஜோடிப்பொருத்தம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. முறைப்புக்கு இடையே இழையோடும் சின்ன ரொமான்ஸ் சீரியலின் தனி ஸ்பெசல்.

சினிமாவிலும் ஆர்வம்

சினிமாவிலும் ஆர்வம்

ஆண்டாள் அழகர் சூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்த போது காலை முதல் நடித்த சோர்வு எதுவும் இன்றி மலர்ச்சியோடு அடுத்த ஷாட்டிற்கு தயார் என்பது போலவே இருக்கிறார் ரம்யா. டிவி சீரியலில் பிசியாக நடித்தாலும் மந்திரப்புன்னகை, தடையறத் தாக்க ஆகிய படங்களில் நடித்தது தனக்கு ஒரு திருப்புமுனை என்கிறார் ரம்யா.

தலைமுறைகள்

தலைமுறைகள்

பாலுமகேந்திரா இயக்கிய தலைமுறைகள் படத்தில் கதாநாயகியாக நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்று கூறும் ரம்யா, மாஸ் படத்திலும் நடித்திருக்கிறார்.

மலையாள சீரியலில்

மலையாள சீரியலில்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மலையாள ரீமேக்கில் நாயகியாக நடிக்கிறாராம். தமிழ் சீரியல்களில் மலையாள நடிகைகள் ஆதிக்கம் இருக்கையில் மலையாள சீரியலில் காலடி எடுத்து வைத்துள்ளார் தமிழ்நாட்டின் ரம்யா.

நல்ல கதாபாத்திரங்கள்

நல்ல கதாபாத்திரங்கள்

சீரியலின் வளர்ச்சி நாளுக்கு நாள் ஆரோக்கியமாக இருக்கிறது. சினிமாவில் இருந்து சீரியலுக்கு வருபவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. சீரியலைப்போல திரைப்படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரமாக அமைந்தால் மறுக்காமல் தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் ரம்யா.

English summary
TV artist Ramya is entering into Malayalam serial

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil