Just In
- 14 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 14 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 15 hrs ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 15 hrs ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- News
மக்களே உஷார்.. சானிட்டைசர்களால் குழந்தைகள் கண்களுக்கு பாதிப்பு அதிகரிப்பு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குக்கு வித் கோமாளிகளை பாராட்டிய ரம்யா கிருஷ்ணன்!
சென்னை: விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். அப்போது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் கோமாளிகளை இவங்க கலக்கறாங்க என்று பாராட்டினார்.
விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி, இப்போது ஃபைனலை நெருங்கி உள்ளது. வனிதா விஜயகுமார், உமா ரியாஸ், ரம்யா பாண்டியன்,. ரேகா உள்ளிட்டோர் ஃபைனலுக்கு தேர்வாகி இந்த வாரம் கிராண்ட் ஃபினாலே ஒளிபரப்பாக உள்ளது.
நிகழ்ச்சிக்கு எவர் கிரீன் நடிகை ரம்யா கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக வந்து, கோமாளிகள் செய்யும் குறும்புத் தனங்களை நேரில் பார்த்து ரசிக்கிறார்.நகைச்சுவை கலந்த குக்கு வித் கோமாளி சமையல் போட்டி பார்க்கும் மக்களை தன் வசம் ஈர்த்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

செலிபிரேஷன் வீக்
கடந்த வாரம் குக்கு வித் கோமாளியின் செலிபிரேஷன் வீக் என்று கொண்டாடினார்கள். இதில் கிராண்ட் ஃபினாலேக்குத் தேர்வானவர்கள் நிகழ்ச்சியை என்ஜாய் செய்ய கேக் வெட்டி கொண்டாடினாலும், சமையல் போட்டியும் வைத்து, ஒரு பரிசும் கொடுத்துக் கொண்டாடினார்கள். அப்போது குக் செய்பவருடன் வீட்டில் இருக்கும் ஒரு நபர் அல்லது நண்பர் வட்டாரத்தில் ஒருவர் போட்டியாளருடன் கலந்துக்கொள்ளலாம் என்று அனுமதித்தார்கள்.

பிக்பாஸ் போலவே
இந்த செலிபிரேஷன் வாரத்தில் கோமாளிகள் சமையல் செய்முறையை சொல்ல, போட்டியாளர்கள் அதன்படி சமைக்க வேண்டும். கோமாளிகளுக்கு பிக்பாஸ் பேச அழைக்கும் அறை போல் அமைத்து, அங்கு பிக்பாஸ் வாய்ஸில் அவர் இன்கிரியண்ட்ஸ் சொல்ல, அதைக்கேட்டு வந்து கோமாளிகள் சொல்ல, அதன்படி குக்குகள் சமைக்க வேண்டும், இதிலும் கோமாளிகள் சிரிப்பை வரவழைத்தார்கள். இந்த காமெடிக்காக நிகழ்ச்சியைப் பார்த்து வருபவர்கள் அதிகம்.

ரம்யா கிருஷ்னண்
நடிகை ரம்யா கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக வந்திருந்த போதும், புகழ் அவரையும் கலாய்த்தார். வயசானாலும் உங்க ஸ்டைலும், அழகும் உங்களை விட்டுப் போகலை என்று புகழ் சொல்ல, அது என் கூடவே பொறந்தது என்று பதிலுக்கு ரம்யாவும் பேசினார். சிவாங்கி ராஜ மாதா போல கெட்டப்பில் வர, ஐயோ என்று சிரித்தார் ரம்யா. சமையலில் காமெடி செய்வது என்பது இதுதான் முதல் தடவையா இருக்கும் என்றும் சொன்னார்.

இவங்க கலக்கறாங்க
ஷோ ரொம்ப நல்லாருக்கு... அதுவும் இவங்க எல்லாரும் கலக்கறாங்க என்று கோமாளிகளைப் பார்த்துக் கூறினார் ரம்யா கிருஷ்னன். எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் ரம்யா இந்த நிகழ்ச்சிகளின் கோமாளிகள் செய்யும் சேட்டைகளை, வெள்ளந்தித் தனத்தைப் பார்த்து ரொம்பவே ரசித்து சிரித்து இருக்கார். வரும் சனி ஞாயிறு இரவு விஜய் டிவியில் பார்க்கலாம்.