அதை செய்யச் சொன்ன ரம்யா பாண்டியன் ..நாங்க வரோம்.. துள்ளிக் குதித்து ஓடி வந்த ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் சொன்ன ஒரே காரணத்துக்காக பலரும் அவர் சொன்ன விஷயத்தில் களம் குதித்துள்ளனர்.

செடி வச்சுட்டு அந்தப் போட்டோக்களை எனக்கு ஷேர் பண்ணுங்க என்பதுதான் ரம்யா பாண்டின் வச்ச கோரிக்கை.

விடுவார்களா ரசிகர்கள். தீவிரமாக களம் குதித்து கலக்கிக் கொண்டுள்ளனர். செடி வைக்கும் புகைப்படங்களைக் குவித்து வருகின்றனர்.

என் காதல்

என் காதல்

ரம்யா பாண்டியன் வெளியிட்ட வீடியோவில் இதுதான் தன் காதல் குறித்து என்று கூறியதை கேட்ட ரசிகர்கள் ஆரம்பத்தில் அதிர்ச்சி அடைந்தாலும் வீடியோ முழுவதையும் பார்த்தபின்பு ஆனந்தம் அடைந்தனர். அதற்கு காரணம் அவர்கள் நினைத்தது போல் ரம்யா பாண்டியனின் காதலர் நடிகரோ, பிசினஸ்மேனோ இல்லை மாறாக இயற்கைதான் அந்தக் காதலர்.. மரம், செடிகள் தான் அவர் காதலராம்.

வாழ்த்துகள்

வாழ்த்துகள்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்களின் புடைசூழ வலம் வந்து கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன் தற்போது தன்னை சுற்றி சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் சென்னை கார்ப்பரேஷன் துணை ஆணையர் படையோடு செய்த செயல்தான் வைரலாகி வருகிறது. சும்மாவே இவருக்கு குடை பிடிக்கும் ரசிகர்கள் இவருடைய இந்த போஸ்ட் பார்த்து இவருக்கு வாழ்த்துக்களையும் ஆதரவினையும் கமெண்டுகளாக அனுப்பி வருகின்றனர்.

Recommended Video

Ramya Pandian அட்டகாசமான Photoshoot | அழகின் ரகசியம் இதுதானா?
மரம் நட ஆர்வம்

மரம் நட ஆர்வம்

டைடல் பார்க் எதிரில் மரம் நடும் விழாவில் கலந்துகொண்ட ரம்யா பாண்டியன் மரம் நடுவது தன் வாழ்க்கையின் ஒரு பகுதி என்றே கூறியுள்ளார். இயற்கையை பாதுகாப்பதும் மரங்களை நடுவதும் தன் ரத்தத்தில் கலந்துள்ளதோ என்னவோ தானும் தன் அப்பாவைப் போலவே மரம் நடுவதில் ஆர்வம் காட்டுவதாகவும் சொல்லியுள்ளார்.
அதுமட்டுமின்றி கர்மாவை தான் மிகவும் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

இயற்கைக்கும் சேர்த்துதான்

இயற்கைக்கும் சேர்த்துதான்

அது மனிதர்களுக்கு மட்டுமின்றி இயற்கைக்கும் சேர்த்து தான் என்றும் நம்ம ஆக்ஷனுக்கு ஏத்த மாதிரிதான் ரியாக்சனும் இருக்கும்னு குட்டி ஸ்பீச் கொடுத்திருக்காரு.இவ்வளவு தூரம் பேட்டியைப் பார்த்த நம்ம ரம்யா பாண்டியன் ரசிகர்கள் கடைசியாக மரம் நடும் விழாவிற்கு யார் அழைத்தாலும் நான் வருவேன் என்று அவர் சொன்னதை கேட்காமல் விட்டிருப்பார்கள்!!??? இந்நேரம் மரக்கன்றுகளை வாங்க ஒரு கூட்டம் கிளம்பியிருக்கும்.

நானே வருவேன்

நானே வருவேன்

அப்படி கிளம்பி இருக்கும் ரசிகர்கள் எல்லாம் ஒரு விஷயத்தை கவனத்தில் வச்சுக்கங்க அவங்க மரம் நட்டு போன அப்புறம் அந்த மரத்தோட ஸ்டேட்டஸ 15 நாளுக்கு ஒருக்கா அப்டேட் பண்ணிட்டே இருக்கனுமாம். இல்லாட்டி கோச்சுக்குவாங்க.. பார்த்துக்கங்க. எது எப்படியோ மரம் நட்டு காத்து வருதோ இல்லையோ நம்ம ஏரியாக்கு ரம்யா பாண்டியன் வந்தா போதும் என்று நினைக்கிறவங்க மரக்கன்றை வாங்கி வைத்துவிட்டு நம்ம ரம்யா பாண்டியனுக்கு தகவலை சொல்லிடுங்க. எப்படியாவது நல்லது நடந்தா சரிதானே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X