ஆத்தி.. புலிக்கு பால் கொடுக்கிறாரே ரவீனா தாஹா.. முதலை முதுகிலேயே சவாரி.. ஜமாய்க்கிறாரே!
சென்னை: சின்னத்திரை நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான ரவீனா தாஹா புலிக்குட்டிக்கு பால் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார். எனக்கா ரெட் கார்டு எடுத்து பாரு ரெக்கார்டு என சிம்புவை போல ரவீனா தாஹாவும் செம மாஸ் காட்டி வருகிறார்.
சன் டிவியில் ரம்யா கிருஷ்ணன் நடித்த தங்கம் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் ரவீனா தாஹா. அதன் பின்னர், விஜய்யின் ஜில்லா, புலி படங்களில் நடித்தார். ராட்சசன் படத்தில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கிடைத்தது.

மேலும், சில படங்களிலும் நடித்த ரவீனா தாஹா மெளன ராகம் 2 சீரியல் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். டான்ஸ் ஜோடி டான்ஸ் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக் கொண்ட ரவீனா தாஹா பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், தாய்லாந்துக்கு டூர் சென்ற இடத்தில் புலியுடன் வாக்கிங் செல்வது, முதலை முதுகில் சவாரி செய்வது என அட்டகாசம் செய்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.
புலியுடன் வாக்கிங்: பெரிய சைஸ் புலியை சங்கிலி போட்டுக் கட்டி கையில் பிடித்துக் கொண்டு சர்க்கஸில் வலம் வருபவர்களை போல வாக்கிங் கூட்டி வருவதும், அதை ஸ்டூலில் மீது ஏற வைப்பதும் என தாய்லாந்தில் உள்ள மிருக காட்சி சாலைக்கு சென்ற இடத்தில் த்ரில்லான அனுபவங்களையும் சாகசங்களையும் செய்து பார்த்து ஹேப்பியாகி உள்ளார் ரவீனா தாஹா.
முதலை முதுகில் சவாரி: கங்குவா படத்தில் செட்டப் முதலையை சூர்யா அடித்து வீழ்த்தும் காட்சிகள் செம தத்ரூபமாக படமாக்கப்பட்டு இருக்கும். இந்நிலையில், ரியல் முதலையின் முதுகில் ஏறி அமர்ந்துக் கொண்டு ஒய்யாரமாக சவாரி செய்யும் ரவீனா தாஹாவின் காட்சிகள் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளன. அப்படியே திரும்பி ஒரு கடி கடிச்சா நீங்க அதுக்கு ஸ்நாக்ஸ் ஆகிடுவீங்க என நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
புலிக்கு பாலூட்டிய ரவீனா: எல்லாத்துக்கும் மேல் பூனைக்குட்டி போல இருக்கும் புலிக்குட்டி ஒன்றை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு புட்டி பால் கொடுத்து ஊட்டும் வீடியோ காட்சியையும் ஷேர் செய்து ஏகப்பட்ட கமெண்ட்டுகளையும் லைக்குகளையும் அள்ளியுள்ளார் ரவீனா தாஹா. சின்னத்திரை தேர்தலில் நடைபெற்ற பஞ்சாயத்துகளால் டென்ஷனில் இருந்த ரவீனா தற்போது தாய்லாந்தில் செம ஹேப்பியாக டூர் அடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











