»   »  தமிழ் சீரியல்களை மிரட்டிக் கொண்டு சக்கை போடு போடும் ரீமேக் சீரியல்கள்!

தமிழ் சீரியல்களை மிரட்டிக் கொண்டு சக்கை போடு போடும் ரீமேக் சீரியல்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு சீரியலை ஒரு மொழியில் பார்த்தாலே நம் வீட்டில் கண்ணீர் ஆறு தினம், தினம் ஓடுகின்றது. இந்நிலையில் ஒரே சீரியல் கிட்டதட்ட நான்கு அல்லது ஐந்து மொழிகளில் வந்தால் அவ்வளவுதான்.

தற்போதயை டி.ஆர்.பி ரேஸில் புதிய, புதிய சீரியல்களை களமிறக்க வேண்டிய நிலையில் டிவி சேனல்கள் உள்ளன. டப்பிங் சீரியல்கள் ஒருபுறம் இருந்தாலும் தற்போது ரீமேக் சீரியல்களும் ரேட்டிங்கை ஏற்றி வருகின்றன.

அடுத்த வாரமே தமிழில்:

அடுத்த வாரமே தமிழில்:

இந்த ரேஸில் ஜெயிக்க சேனல்கள் கையாலும் புதிய யுக்திதான் "ரீமேக்" சீரியல்கள். ஒரு சீரியல் ஏதோ ஒரு மொழியில் தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தால் அடுத்த வாரமே அது தமிழுக்கு ரீமேக் ஆகிவிடும்.

முதலில் தெய்வம் தந்த வீடு:

முதலில் தெய்வம் தந்த வீடு:

அப்படி, இந்த யுக்தியை முதலில் கையில் எடுத்தது விஜய் டிவிதான்... ஸ்டார் குழுமத்தினைச் சேர்ந்த இச்சேனலில் ஓடிக் கொண்டிருக்கும் முதல் ரீமேக் தொடர் "தெய்வம் தந்த வீடு"...

அமைதியான பெண்ணின் கதை:

அமைதியான பெண்ணின் கதை:

சீதா என்கின்ற அமைதியான பெண், ஒரு பணக்கார, செல்வாக்கு நிறைந்த வீட்டின் மருமகளாக மாறி திறமையுடன் எப்படி ஜொலிக்கின்றாள் என்பதுதான் இச்சீரியலின் ஒன்லைன்.

மாமியார் கொடுமை நோ:

மாமியார் கொடுமை நோ:

முக்கியமாக இந்த சீரியலில் மாமியார் கொடுமை கிடையாது என்பது பிளஸ் பாய்ண்ட்... ஆனால், அதற்கெல்லாம் ஒட்டுமொத்தமாக சீதாவின் சித்தியே எல்லாவற்றையும் செய்து விடுகின்றார்.

இந்தியின் ரீமேக்:

இந்தியின் ரீமேக்:

இந்த சீரியல் ஒரிஜினல் கதையினைக் கொண்டது அல்ல... இந்தியில் ஓடிக் கொண்டிருக்கும் "சாத் நிபானா சாத்தியா" என்ற சீரியலின் ரீமேக்தான் இது. இந்த சீரியலில் கோபி என்ற மராட்டிய பெண், மோடி என்கின்ற குடும்பப் பெயருடைய கோடீஸ்வரக் குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டு எப்படி முன்னேறுகின்றார் என்பதுதான் கதை.

மலையாளத்தில் சந்தன மழை:

மலையாளத்தில் சந்தன மழை:

இந்த சீரியல் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்தில் சந்தனமழா, கோடால கோடால கொடுக்கு பெல்லம்மா என்று தெலுங்கிலும், புதுச்சாபால் என்று மராத்தியிலும், பொத்துபொரோன் என்று பெங்காலியிலும் பட்டையைக் கிளப்பி வருகின்றது. ஆனால், அனைத்துக்கும் ஒரே கதைதான் அடித்தளம்.

நெக்ஸ்ட் கமுகவ:

நெக்ஸ்ட் கமுகவ:

அடுத்ததாக "கல்யாணம் முதல் காதல் வரை"... பிரியா என்ற கேரள பல் மருத்துவரும், அர்ஜூன் என்ற தமிழ் கார்ப்பரேட் சி.இ.ஓவும் எதிர், எதிர் வீட்டில் குடியிருக்கின்றனர் தங்களுடைய குடும்பத்தினருடன். விவாகரத்து ஆன அர்ஜூனின் குழந்தை பூஜாவால் இருவரும் மணவாழ்க்கைக்குள் அவஸ்தையுடன் பொருந்தினாலும், பின்னர் அவர்களுக்குள் காதல் எப்படி மலர்கின்றது என்பதுதான் கதை.

தெலுங்கில் மட்டும் டப்பிங்:

தெலுங்கில் மட்டும் டப்பிங்:

இதுவும் ரீமேக்தான்... இந்தி சீரியலான "யே ஹை மொகபத்தீன்" என்ற தொடரின் தமிழ் வெர்சன் "கல்யாணம் முதல் காதல் வரை"... தெலுங்கில் மட்டும் இந்த சீரியல் இந்தியில் இருந்து டப்பிங் ஆகி வருகின்றது " மனசா பல்லிக்கே மவுன கீதம்" என்ற பெயரில். பெங்காலி பொழியில் "மான் நியே கச்சகச்சி" என்றும், கன்னடத்தில் "அவனு மத்தே ஷ்ராவனி" என்ற பெயரில் ஓடிக் கொண்டிருக்கின்றது.

பொழுது போனா சரிதான்:

பொழுது போனா சரிதான்:

ஹ்ம்ம்... ஒரு சீரியல் போரடித்துப் போனால் அதே கதையை வேறு மொழியில் பார்ப்பதும் நல்ல எக்ஸ்பீரியன்ஸ்தான் என்னவோ போங்கப்பா!!

English summary
the two soap opera in Hindi which is remakes in various languages in India.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil