»   »  ஜீ தமிழில் வெற்றிவேல், ராஜா மந்திரி - குடியரசு தின சிறப்பு திரைப்படங்கள்

ஜீ தமிழில் வெற்றிவேல், ராஜா மந்திரி - குடியரசு தின சிறப்பு திரைப்படங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜீ தமிழ் தொலைக்காட்சி ஜனவரி 26 அன்று சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளது. குடியரசு தின நிகழ்ச்சிகளின் தொடக்கமாக, ஜனவரி 26 ஆம் தேதி காலை 9 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

Republic day Special movies on Zee Tamil TV

காலை 10 மணிக்கு, உஷா கிருஷ்ணன் இயக்கத்தில், கலையரசன், காலி வெங்கட், ஷாலின் ஜோயா மற்றும் வைஷாலி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்த "ராஜ மந்திரி" திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

சூர்யா சிங்கம்

குடியரசு தினத்தன்று திரைக்கு வர இருக்கும், பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக பெயர் பெற்றுள்ள 'எஸ் 3' திரைப்படத்தின் கதாநாயகன் சூர்யா பங்கேற்கும் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியான 'சீறும் சிங்கம் சூர்யா - பகுதி 2' நிகழ்ச்சி பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ராகவா லாரன்ஸ்

திரைக்கு வர இருக்கும் அதிரடி திரைப்படமான "சிவலிங்கா" படத்தின் கதாநாயகன் நடிகர் ராகவா லாரன்சுடன் ஒரு சுவாரஷ்யமான சந்திப்பு ஒளிபரப்பாகிறது. தொகுப்பாளினி கீர்த்தி இதனை தொகுத்து வழங்குகிறார்.

வெற்றிவேல்

கடந்தாண்டின் சூப்பர் ஹிட் திரைப்படமான 'வெற்றிவேல்' ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குடியரசு தின சிறப்பு படமாக, மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. வசந்த மணி இயக்க, சசிகுமார், மியா ஜார்ஜ் மற்றும் நிகிலா விமல் உள்ளிட்ட பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர்.

English summary
Vetrivel, Raja Mandhiri Movies to telecast on Zee Tamil TV

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil