»   »  ஜன.26ல் சன்டிவியில் அரண்மனை…

ஜன.26ல் சன்டிவியில் அரண்மனை…

Posted By:
Subscribe to Oneindia Tamil

குடியரசு தினத்தன்று சன்டிவியில் ‘அரண்மனை', விஜய் டிவியில் ‘டமால் டுமீல்' திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடுமுறை தினம் என்றாலே சிறப்பு திரைப்படங்கள் தொலைக்காட்சிகளில் வரிசை கட்டும். ஜனவரி 26ஆம் தேதி தமிழக தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளும் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.

சன் டிவியில்

சன் டிவியில்

சுந்தர் இயக்கத்தில் வினய், ஆன்ட்ரியா, ஹன்சிகா நடித்த ‘அரண்மனை' திரைப்படம் ஒளிபரப்பாகிறது. அதோடு பட்டிமன்றம், நடிகர், நடிகையர்களின் சிறப்பு பேட்டிகளும் ஒளிபரப்பாகிறது.

விஜய் டிவியில்

விஜய் டிவியில்

வைபவ், ரம்யா நம்பீசன் நடித்த ‘டமால் டுமீல்' திரைப்படம் விஜய் டிவியில் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பிற்பகல் 3 மணிக்கு மாதவன், அமலாபால், ஆர்யா நடித்த வேட்டை திரைப்படமும் ஒளிபரப்பாகிறது.

ஹேப்பி நியூ இயர்

ஹேப்பி நியூ இயர்

ஷாருக்கான்,தீபிகா படுகோனே நடித்த ‘ஹேப்பி நியூ இயர்' திரைப்படம் ஜீ டிவியில் ஒளிபரப்பாகிறது. ஜீ தமிழ் டிவியில் இது கதிர்வேலன் காதல், பட்டத்து யானை, கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்கள் ஒளிபரப்பாகின்றன.

கத்தி

கத்தி

ஜெயாடிவியில் கத்தி திரைப்படம் சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பாகிறது. இந்த குடியரசு தினத்தன்று கத்தி படத்திற்கும், அரண்மனைக்கும் இடையேதான் போட்டி அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

English summary
Aranmanai at 6.30 pm Republic Day special movie on Sun TV.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil