ரோபோ சங்கர் மகள் உருக்கம்: மனைவியின் நடனம், தந்தையின் மரபு குறித்து மனம் திறந்தார்

ரோபோ சங்கரின் மறைவுக்குப் பிறகு, அவரது மகள் தந்தையின் மரபு, மனைவியின் நடனம் குறித்து மனம் திறந்தார். குடும்பத்தின் எதிர்கால திட்டங்கள், சமூக வலைத்தள விமர்சனங்கள் பற்றியும் பேசினார். ரோபோ சங்கர் விட்டுச் சென்ற கடமைகளை நிறைவேற்றுவோம் என உறுதியளித்தார். அவரது கலைப் பயணத்தையும் நினைவுகூர்ந்தார்.

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவர் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி மறைந்தார். இவரது மறைவு அதிர்ச்சியை பலருக்கும் ஏற்படுத்தியது. அவர் மறைந்து 16வது நாள் நினைவேந்தல் நிகழ்வை அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். இதில் ரோபோ சக்கரின் உருவப்படம் திறக்கப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

குறிப்பாக இறுதிச் சடங்கில் ரோபோ சங்கரின் மனைவி நடனமாடியது பலரின் கவனத்தை ஈர்த்தது. இதுகுறித்து ரோபோ சங்கரின் மகள் கூறுகையில், "அவங்க டான்ஸ்லதான் அவங்களுடைய அன்பை வெளிப்படுத்துவாங்க" என்று அவரது மகள் இந்திரஜா கூறியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த செய்தியாளர்கள் சந்திப்பில், “ ரோபோ சங்கர் இல்லாமல் முதல்முறையாக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பது கஷ்டமாக இருப்பதாக அவரின் மகள் கூறினார். பத்திரிகையாளர்கள், ரசிகர்கள், காவல்துறை அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். இறுதிவரை ரோபோ சங்கருக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் அவர் மனதார நன்றி கூறினார்.

Robo Shankar Daughter Indraja Explains Roumours About Robo Shankar Death Emotional

ரோபோ சங்கர் விட்டுச் சென்ற கடமைகளை முடிப்போம் என்றும், அவர் சென்ற பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என்றும் ரோபோ சங்கரின் மகள் நம்பிக்கையுடன் தெரிவித்தார். ரசிகர்கள், பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ரோபோ சங்கர் எந்த இடத்தில் சிரிப்பும் நகைச்சுவையும் இருக்கிறதோ, அந்த இடத்தில் இருப்பார் என்று அவர் உருக்கமாக கூறினார்.

ஒரு லட்சம் மேடைகள்: எந்தத் துணையும் இல்லாமல் மேடை கலைஞராக ரோபோ சங்கர் தனது பயணத்தை தொடங்கினார். அவர் 46 வயதில் இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்தது ஒவ்வொரு நாளும் நினைத்து பார்க்கிறோம். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மேடைகளில் அவர் ஏறி இருக்கிறார். தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது கொடுக்கும்போது இந்த தகவல் எங்களுக்குத் தெரிந்தது என்று ரோபோ சங்கரின் மகள் பெருமையுடன் கூறினார்.

பிரியங்காவின் நடனம்: அப்பா ஷூட்டிங் போயிருக்கார் கண்டிப்பா வருவார் என்று ரோபோ சங்கரின் மகள் நம்பிக்கையுடன் கூறினார். எல்லா தருணத்திலும் அன்பாக இருந்த அனைவருக்கும் நன்றி. இனிமேலும் எங்களுடன் அன்பாக இருக்க வேண்டும் என்று ரோபோ சங்கர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்றார். அம்மாவின் நடனம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது, அது அவர்களின் தனிப்பட்ட உணர்வு என்றும் அவர் கூறினார்.

மரணத்திற்கு காரணம்: சமூக வலைத்தளங்களில் பலரும் ரோபோ சங்கர் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். ரோபோ குறித்து தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பது போல் சிலர் கருத்துக்களை தெரிவித்தது அதிர்ச்சியளித்தது. தற்போது மனம் விட்டு பேசும் சூழ்நிலையில் நாங்கள் இல்லை. இதுகுறித்து பின்னர் ஒருநாளில் பேசுவோம் என்று ரோபோ சங்கரின் மருமகன் தெரிவித்தார். அதேபோல், அவரது மரணத்திற்கு காரணம் என்று அவர் தனது உடலில் பெயிண்ட் பூசி நடித்ததுதான் என்று பலரும் பலவிதமாக கூறி வருகிறார்கள். ஆனால் காரணம் அது இல்லை. அது குறித்து நாங்கள் பின்னர் ஒரு நாளில் கட்டாயம் கூறுகிறோம் என்று அவரது மகள் இந்திரஜா தெரிவித்தார்.

More from Filmibeat

Read more about: robo shankar tamil cinema
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X