ரோஜா சீரியல் அனுவுக்கு கொரோனா... ரசிகர்கள் உருக்கம்
சென்னை : சன் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ரோஜா. இந்த சீரியல் 2018 ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. ஹீரோயின் ரோஜாவின் க்யூட்டான எக்ஸ்பிரஷன்களை பார்ப்பதற்காகவே இந்த சீரியலை பார்ப்பவர்கள் ஏராளம்.
இந்த சீரியலில் ஹீரோ அர்ஜுன் கேரக்டரில் சிபு சூரியனும், ஹீரோயின் ரோஜா கேரக்டரில் பிரியங்கா நல்காரியும் நடித்து வருகிறார்கள். இவர்களை தவிர வடிவுக்கரசி, ஷியாமளா, காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

விஜே அக்ஷயாவிற்கு கொரோனா
ரோஜா சீரியலில் அனு கேரக்டரில் நடித்து வருபவர் விஜே அக்ஷயா. மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில், ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அக்ஷயாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மூச்சு விட சிரமப்பட்டேன்
அவர் வெளியிட்டுள்ள தகவலில், துரதிஷ்டவசமாக எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் எனக்கு மூச்சு விட சற்று சிரமமாக இருந்தது. அதனால் மருத்துவ ஆலோசனையின் பேரில் , தேவையான மருத்துவ உதவியுடன் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டேன். இப்போது சற்று நன்றாக உணர்கிறேன்.

தடுப்பூசி போட்டும் கொரோனா
நான் தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். இருந்தாலும் அது கொரோனா வராமல் தடுக்கவில்லை. அதே சமயம் நோயின் தாக்கல் தீவிரமடையாமல் குறைத்து விட்டது. கொரோனா தற்போதும் எல்லா இடங்களிலும் உள்ளது. அதனால் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிருங்கள்.

அனைவரும் கவனமாக இருங்கள்
அனைவரும் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். விரைவில் பூரணமாக குணமடைவேன் என நம்புகிறேன். தொடர்ந்து எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். கவனமாக இருங்கள். பாதுகாப்பாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார். அக்ஷயா கேட்டுக் கொண்டதன் பேரில் அவரது ரசிகர்கள், நெட்டிசன்கள் பலர் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனையும், வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











