»   »  வேந்தர் டிவியில் ரொமான்ஸ் சீரியல் கண்ணே என் கண்மணியே

வேந்தர் டிவியில் ரொமான்ஸ் சீரியல் கண்ணே என் கண்மணியே

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபகாலமாக வேற்றுமொழி நிகழ்ச்சிகளையும், நாடகங்களையும் டப்பிங் செய்து தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவது ஒரு ட்ரெண்டாகிவிட்டது. இதனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், நாடகங்களிலும் ஓர் புத்துணர்வு கிடைக்குமென்று ஒரு தரப்பினர் கூற, இது நம் சொந்த மண்ணில் உள்ள கலைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் என்று மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.

வேந்தர் டிவி யில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாகும் நெடும் தொடர்"கண்ணே என் கண்மணியே" இப்போது இரண்டாம் பாகமாக ரசிகர்களின் பேராதரவுடன் 100 எபிஸோடுகளை கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டு இருக்கிறது.

ரொமான்ஸ் சீரியல்

ரொமான்ஸ் சீரியல்

நேர்மை தவறாத போலீஸ் குடும்பத்தை சேர்ந்த கதையின் நாயகி ஆரோகியை நிழல் உலக தாதா சின்ஹானியாவின் வளர்ப்பு மகன் அர்ஜுன் ஏமாற்றி திருமணம் செய்துகொண்டாலும். ஆரோகிக்கு அர்ஜுன் மீது இருக்கும் வெளியே காட்ட முடியாத காதலால் அவனை விட்டு பிரியவும் மனம் இல்லாமல் அவனுடன் சேர்ந்து வாழவும் வழியில்லாமல்துடிக்கும் ஆரோகி அர்ஜுன் காதலை சுவாரஸ்யமாகவும் இளமைத்துள்ளலுடனும் சொல்லும் காதல் காவியம் "கண்ணே என் கண்மணியே" .

கண்ணே என் கண்மணியே

கண்ணே என் கண்மணியே

டிவி சீரியல்களில் ரொமான்ஸ் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். காரணம் சின்னத்திரையை குட்டீஸ்கள் முதல் பெரியவர்கள் பார்ப்பதால் கொஞ்சம் இலைமறை காய்மறையாகவே காதல் காட்சிகள் வைப்பார்கள். ஆனால் இந்த கண்ணே என் கண்மணியே சீரியலில் ரொமான்ஸ் காட்சிகள் பட்டையை கிளப்புகின்றன.

கவர்ச்சி நாயகி கிருத்திகா காம்ரா

கவர்ச்சி நாயகி கிருத்திகா காம்ரா

இதில் கதாநாயகனாக கரண் குன்ரா (அர்ஜுன்) கதாபாத்திரத்திலும் கதாநாயகியாக நடிக்கும் ஆரோகி (கிருத்திகா கம்ரா) கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இந்த கிருத்திக கம்ரா ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண்களின் பட்டியலில் இடம் பிடித்தவ. அர்ஜூனுக்கும் ஆரோகிக்கும் இடையேயான ரொமான்ஸ்தான் சீரியலின் பலம்.

சுவாரஸ்யமான சீரியல்

கண்ணே என் கண்மணியே டப்பிங் சீரியல்தான் என்றாலும் சுவாரஸ்யமாகவே போகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.00 மணிக்கு இந்த நெடும் தொடர் வேந்தர் டிவி யில் ஒளிபரப்பாகிறது. தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகும் பல அழுகாச்சி சீரியல்கள் இது போன்ற டப்பிங் ரொமான்ஸ் சீரியல்களுடன் போட்டிபோட முடியவில்லை என்பது என்னவோ உண்மைதான்.

English summary
Romance serial Kanne en Kanmaniye telecast on Vendhar TV.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil