கொண்டையில் கும்முன்னு மல்லிகை.. சைட் இடுப்பு.. சிலிர்க்க வைக்கும் கண்ணம்மா!

சென்னை: ட்ரெடிஷனல் குயினு, ரசிகர்களின் மயிலு.. இவ்வளவு கவர்ச்சியா இருக்கீங்களே என்று பாரதியின் கண்ணம்மாவான ரோஷ்னி ஹரிப்ரியனைப் பார்த்து உருகிக் கொண்டுள்ளனர் ரசிகர்கள்.

தலையில் போட்ட கொண்டையில் தொங்கும் மல்லிகைப் பூவில் ரொம்பவே அழகா இருக்கீங்க என்றும் பலர் சிலாகிக்கின்றனர்.

எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத தித்திப்பாக கண்ணுக்குள்ளே நிற்கிறாரே கண்ணம்மானு ரசிகர்கள் பாடும் கவிதைதான் இன்ஸ்டாவில் வைரலாகியுள்ளது.

செம கார்ஜியஸ்

செம கார்ஜியஸ்

இந்த மாதிரி வந்து நின்னா இனி சின்னத்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் ரோஷ்னி தான்னு நெட்டிசன்களும் தங்கள் பங்குக்கு கொளுத்தி போட்டு வருகின்றனர் . சேலை கட்டி வந்த மயிலாக புடவையில் ரோஷ்னியை பார்த்ததும் நம்ம பங்குக்கு நாமும் எதாவது சொல்லுவோம்னு அவருடைய ரசிகர்கள் வரிசை கட்டிக் கொண்டு வர்ணித்து வருகின்றனர் . சீரியலில் தான் இப்படி வருகிறாரே இன்ஸ்டாகிராமிலாவது கொஞ்சம் மார்டனாக வந்து மனச குளிர வச்சா என்ன தப்பாம்னு செல்லமாக கொஞ்சும் ரசிகர்களும் இருக்கின்றனர்.

மொட்டை மாடியில் அதகளம்

மொட்டை மாடியில் அதகளம்

சிங்கப் பெண், வீரப்பெண் என்று தினமும் விஜய் டிவியில் ப்ரோமோவில் வந்து கொண்டிருக்கும் கண்ணம்மா இப்போ மொட்ட மாடியில அங்க என்னம்மா வேலைன்னு இவரைப் பார்த்து நக்கல் அடிக்கும் நெட்டிசன்கள் கொண்டையில் மல்லிகை பூவோடு சூரியனைப் பார்த்து வெட்கத்தால் கண்மூடி சிரிக்கும் இவருடைய சிரிப்பை பார்த்ததும் அப்படியே ஐஸ் போல உருகி விட்டார்களாமே.

Recommended Video

Bharathi Kannamma சீரியல் சூட்டிங்கில் கலந்து கொள்ளாத Kannamma | Raja Rani, Kannana Kanne
காத்திருக்கும் பெண்கள்

காத்திருக்கும் பெண்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் வருடக்கணக்கில் ஒளிபரப்பி வந்தாலும் தற்போது இதுதான் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது .இந்த சீரியலை பார்ப்பதற்காக பெண்கள் கூட்டம் காத்திருக்கின்றனர் .அந்த அளவிற்கு பெண் ரசிகர்களை கவர்ந்து இழுத்து வரும் அந்த சீரியலின் கதாநாயகிதான் ரோஷ்னி ஹரிப்ரியன்.

கிராமத்துப் பெண்களும் ரசிப்பு

கிராமத்துப் பெண்களும் ரசிப்பு

இவருக்கு பெண் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் அதிகமான ஆண் ரசிகர்களும் பாலோவர்ஸ்களாக இருந்து வருகின்றனர். எத்தனை கதாநாயகிகள் புதுசு புதுசாக அறிமுகமானாலும் இவருடைய பக்கத்து வீட்டு பெண் போன்ற முக அழகு அனைவரையும் வசீகரித்து விடுகிறது .கலராக இருந்தால் தான் அழகு என்று நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் தற்போது கிராமத்துப் பெண்களை அதிகமாக விரும்பத் தொடங்கிவிட்டனர்.

டஸ்கி அசத்தல்

டஸ்கி அசத்தல்

அதுவும் டஸ்கி ஸ்கினாக இருந்தாலும் வசீகரிக்கும் கண்ணம்மா மாதிரி இருந்தா போதுமேனு இப்போது பெண் தேடும் இளைஞர்களின் லிஸ்டில் குவாலிஃபிகேஷனாக சேர்த்துவிட்டனர். கழுத்தில் கைவைத்து ஏங்கும் பார்வையால் பார்ப்பவர்களை சுண்டி இழுத்த ரோஷ்னியை பார்த்து உச்சுக் கொட்டும் ரசிகர்கள் அவரது கையில் போட்டிருக்கும் டாட்டுவை தான் என்ன என்று சூம் பண்ணி பார்க்கின்றனர் .ஆனால் அதனை வளையல் மறைத்துவிட என்னவாயிருக்கும் அங்கு என்று கமெண்டுகளில் போர் நடத்தி வருகின்றனர்.

எத்தனை அழகு "சுந்தரி"கள் வந்தாலும் "கண்ணம்மா"க்களை அடித்து விட முடியாதுதான்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X