»   »  குடுமிபிடி சண்டையை அடுத்து டிவி சீரியலுக்கு கும்பிடு போட்ட சபீதா ராய்: கை கொடுத்த விஷால்

குடுமிபிடி சண்டையை அடுத்து டிவி சீரியலுக்கு கும்பிடு போட்ட சபீதா ராய்: கை கொடுத்த விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராடான் மீடியா மேனேஜருடனான அடிதடி சண்டைக்கு பிறகு படங்களில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் சபீதா ராய்.

வாணி ராணி தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்த சபீதா ராய்க்கும், ராடான் மீடியா மேனஜர் சுகுமாறனுக்கும் இடையே நள்ளிரவில் நடுத்தெருவில் மோதல் ஏற்பட்டது.

ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலானது.

 சபீதா ராய்

சபீதா ராய்

சுகுமாறனுடன் சபீதா ராய்க்கு கள்ளக்காதல் என்று பேச ஆரம்பித்தனர். அதனால் தான் சுகுமாறனின் மனைவி இல்லாத நேரத்தில் அவர் வீட்டுக்கு சபீதா சென்றார் என்று கூறப்பட்டது.

 பண விவகாரம்

பண விவகாரம்

சுகுமாறனுக்கும் எனக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. நான் அவருக்கு கடனாக கொடுத்த பணத்தை வாங்கச் சென்ற இடத்தில் சண்டையாகிவிட்டது என்று சபீதா விளக்கம் அளித்தார்.

 சினிமா படங்கள்

சினிமா படங்கள்

குடுமிபிடி சண்டையை அடுத்து வாணி ராணி சீரியலில் இருந்து சபீதா அதிரடியாக நீக்கப்பட்டார். இதையடுத்து தொலைக்காட்சி தொடர்களை விட்டுவிட்டு சினிமா படங்களில் மட்டும் கவனம் செலுத்துவது என்று சபீதா முடிவு செய்துள்ளார்.

விஷால்

விஷால்

சபீதா விஷாலின் இரும்புத் திரையில் நடிக்கிறார். புதுமுகம் மித்ரன் இயக்கும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளார். விஷால் அண்ணாவுடன் சேர்ந்து நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. படத்தில் காமெடி காட்சிகளில் வருகிறேன் என்று சபீதா தெரிவித்துள்ளார்.

 சினிமா

சினிமா

தொலைக்காட்சி தொடர்களுக்கு ஒரு பிரேக் கொடுத்துவிட்டு படங்களில் மட்டும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளேன். தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தான் என் கெரியரை துவங்கினேன் என்கிறார் சபீதா.

English summary
Sabitha Rai has decided to take a break from TV serials and to concentrate only on movies for sometime. She will be seen in Vishal's upcoming movie Irumbu Thirai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil