»   »  விஜய் டிவியில் டி.ராஜேந்தருடன் ஜோடி போடும் சதா

விஜய் டிவியில் டி.ராஜேந்தருடன் ஜோடி போடும் சதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜோடி நிகழ்ச்சியில் ராதா காலம் முடிந்து விட்டது இப்போது சதா காலம் தொடங்கிவிட்டது. டி.ராஜேந்தர் நடுவராக கலக்கப் போகும் ஜோடியில் அவருடன் இணைந்து போட்டியாளர்களுக்கு மதிப்பெண் போடப்போகிறார் சதா.

விஜய் டிவியில், இன்று முதல் ஒளிபரப்பாக உள்ள நடன நிகழ்ச்சி. நடன நிகழ்ச்சியான இதில், நிஜ ஜோடிகளும், ரீல் ஜோடிகளும் சேர்ந்து நடனம் ஆட இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் நடுவராக டி.ராஜேந்தருடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் சதா.

ஜெயம் சதா

ஜெயம் சதா

ஜெயம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சதா. குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறியதால் குறைந்த அளவே வாய்ப்புகள் வந்தது. ஆனாலும் அஜீத் உடன் ஜோடி சேர்ந்து நடித்தார். ஷங்கரின் அந்நியன் படத்தில் கொஞ்சம் விதிமுறைகளை தளர்த்தி நடித்தார் சதா.

குறைந்த வாய்ப்புகள்

குறைந்த வாய்ப்புகள்

சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்புகள் வரவில்லை. எலி படத்தில் வடிவேலு உடன் ஜோடி போடும் அளவிற்கு போனது நிலைமை. வெள்ளித்திரையில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சதாவுக்கு டிவியில் நடுவர் ஆகும் வாய்ப்பு வந்தது.

ஜோடியில் நடுவரான சதா

இந்தியத் தொலைக்காட்சியில் முதல்முறையாக டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிக்காக முழுபக்க விளம்பரம் போடுவது இதுவாகத்தான் இருக்கும். டி.ராஜேந்தர் ஏற்கனவே சன் டிவியில் நடுவராக இருந்து மார்க் போட்டவர். சதாவிற்கு இதுதான் முதல் டிவி நிகழ்ச்சி. இதற்கான முன்னோட்ட நிகழ்ச்சியே கலக்கலாக ஒளிபரப்பினார்கள். இப்போது பேப்பரில் முழுபக்க விளம்பரமும் கொடுத்திருக்கிறார்கள்.

அமித் பார்கவ் - ஸ்ரீ ரஞ்சனி

அமித் பார்கவ் - ஸ்ரீ ரஞ்சனி

ஜோடி நிகழ்ச்சி இன்று முதல், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில், கணவன் -மனைவி, அக்கா-தங்கை, அம்மா-மகள் என ரியல் ஜோடிகள் பல்வேறு கலவைகளில் இருப்பார்கள், அமித் பார்கவ் - ஸ்ரீ ரஞ்சனி, பாலாஜி -நித்யா , வெங்கட்- அஜந்தா, லலிதா- மணி, மாலினி- பிரபு, அலினா- ஷூஜி, அபிநயா- அஞ்சனா, ரியோ- ஸ்ருதி மற்றும் யுவராஜ்- காயத்ரி ஆகியோர் ரியல் ஜோடிகளாக பங்கேற்கிறார்கள். இதில் பங்கேற்க்கும் லலிதா மணி குறிப்பிடத்தக்க நடன இயக்குநர்கள். நடனத்திற்காக மாநில அளவில் விருது பெற்றவர்கள்.

பிரியங்கா

பிரியங்கா

நவீன்- நிஷா, ஹீத்- ரித்வா, மணி- ஃபெலினா, சௌந்தரிய- அராவிஷ, சொனாலி- ஆதி, ஆனந்த்- பரதா நாய்டு மற்றும் சுனிதா- பிரியா ஆகியோர் ரீல் ஜோடிகளாக பங்கேற்கிறார்கள். பிரியங்கா மற்றும் ‘கலக்க போவது யாரு சீசன் 5' சாம்பியன் குரேஷி ஆகியோர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள்.

English summary
Anniyan actress Sadha and Actor-director T Rajender are all set to be the judge on reality show Jodi on Vijay TV. The show will be launched on today 8 PM.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil