Don't Miss!
- News
திருமாவளவனின் "மெகா அஸ்திரம்".. "மோடி என்கிற கேள்வி" என்ற பெயரில் தமிழில் பிபிசி ஆவணப்படம் வெளியீடு
- Sports
இந்தியாவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த பாக். முடிவே எடுக்காமல் திரும்பி வந்த ஜெய்ஷா.. என்ன நடந்தது
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விஜய் டிவியில்…சரவணன் மீனாட்சி பங்கேற்கும் ‘சமையல் சமையல்’
விஜய் டிவியில் 'சமையல் சமையல்' என்ற புத்தம் புதிய நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை முதல் ஒளிபரப்பாக உள்ளது. முதல் நிகழ்ச்சியில் சரவணன் மீனாட்சி புகழ் செந்தில் ஸ்ரீஜா பங்கேற்று அசத்த உள்ளனர்.
வித்தியாசமான பல நிகழ்ச்சிகளை வழங்கி வரும் விஜய் டிவியின் மற்றுமொரு புதிய நிகழ்ச்சி 'சமையல் சமையல்'. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ்' நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் இந்த 'சமையல் சமையல்' நிகழ்ச்சியை வழங்க இருக்கிறார்.

100 சிறந்த உணவு
உலகம் முழுவதும் அவர் பயணித்து கண்டுபிடித்து அவர் புத்தகமாக எழுதியவற்றிலிருந்து 100 சிறந்த உணவு வகைகளை சமைத்துக் காட்ட உள்ளார்.
சமையல் கலையில் வெங்கடேஷ் பட்டின் அனுபவம், திறமை, ஆகியவற்றை நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளார்.

தொலைக்காட்சி வரலாற்றில்
தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றிலேயே இப்படி ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது இதுவே முதல் முறை. இந்நிகழ்ச்சியில் நீங்கள் வெறும் உணவு வகைகளை மட்டும் பார்த்து ரசிக்கப் போவதில்லை.

நட்சத்திரங்களின் சமையல்
உங்கள் அபிமான நட்சத்திரங்களின் சமையலையும் பார்க்கப் போகிறீர்கள். தங்களின் மனம் கவர்ந்தவர்களுக்கு அவர்கள் சமைத்துத் தருவதும் இடம் பெற உள்ளது.

செந்தில் – ஸ்ரீ ஜா
‘சரவணன் மீனாட்சி' தொடரின் நட்சத்திரங்களான செந்தில், ஸ்ரீஜா, நடிகை விஜயலட்சுமி என பலர் வாராவாரம் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற உள்ளனர்.

டிவி பார்த்துக்கொண்டே
இனி, உங்கள் சமையல் அறையை டிவிக்கு முன்னால் எடுத்து வாருங்கள்...அல்லது, உங்கள் சமையல் அறைக்குள் டிவியைக் கொண்டு போங்கள் என்கிறார் வெங்கடேஷ் பட்.